Featured post

Rise of a New Female Director in Tamil Cinema!

 *Rise of a New Female Director in Tamil Cinema!*  *Maragathamalai - A Super-Cool Fantasy Drama as Summer Treat for Kids!*  *L.G. Movies S. ...

Sunday, 15 August 2021

இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு கொண்டாட்டம் முன்னிட்டு

இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு கொண்டாட்டம் முன்னிட்டு 

“83 மற்றும் தலைவி” படங்களின் தயாரிப்பாளர்  விஷ்ணு வர்தன் இந்தூரி, இந்திய சுதந்திரத்திற்கு போராடிய, மறக்கப்பட்ட வரலாறு நாயகர்களின்  கதையை சொல்லும், “ஆஸாத் ஹிந்து” திரைப்பட தொடரில் தான் தயாரிக்கவுள்ள  முதல் திரைப்படத்தை அறிவித்திருக்கிறார். 


வீராங்கனை   துர்காவதி தேவி  




“ஆஸாத் ஹிந்து”  திரைப்பட தொடரிலிருந்து,  முதல் திரைப்படமாக,  சுதந்திர போராட்டத்தில் பங்குகொண்ட, மறக்கப்பட்ட “வீராங்கனை துர்காவதி தேவி” என அழைக்கப்பட்ட துர்கா பாபியின் வாழ்க்கையை திரைக்கு எடுத்து வரவுள்ளது. இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயே அரசுக்கு எதிராக , பகத் சிங் மற்றும் சந்திரசேகர ஆஸாத் போன்ற வீரர்களுக்கு,   சுதந்திரத்திற்கு முழு அர்ப்பணிப்புடன் போராட தூண்டுகோலாக அமைந்த  வீராங்கனை அவர். ஆங்கிலேய உளவு நிறுவனமான MI5 ஆல் “இந்தியாவின் அக்னி” என அழைக்கப்பட்ட வீராங்கனை தான் துர்காவதி.

No comments:

Post a Comment