Featured post

ARC 33rd National Tenpin Bowling Championships

 ARC 33rd National Tenpin Bowling Championships  25th November – 30th November 2024 Amoeba, Church Street, Bangalore 2nd December 2024 Akaas...

Wednesday, 4 August 2021

சென்னையில், இந்தியா - நமீபியா வர்த்தக உச்சி மாநாட்டை

     சென்னையில், இந்தியா - நமீபியா வர்த்தக உச்சி மாநாட்டை, நமீபிய வர்த்தக ஆணையர் டாக்டர் பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.


இந்தியா - ஆப்பிரிக்கா வர்த்தக கவுன்சில் மற்றும் இந்தியா - நமீபியா வர்த்தக மன்றம் ஆகியவை இணைந்து, இந்தியா மற்றும் நமீபியாவுக்கு இடையிலான வர்த்தக மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், சென்னை அசோக் நகரில் இந்தியா - நமீபியா வர்த்தக ஆணைய அலுவலகத்தை திறக்க உள்ளன.

இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மற்றும் வணிக உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், இந்தியா - நமீபியா வர்த்தக உச்சி மாநாடு, சென்னை கிரவுன் பிளாசா ஹோட்டலில் தொடங்கியது. மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட நமீபிய வர்த்தக ஆணையர் டாக்டர் பி.ராதாகிருஷ்ணன் வர்த்தக மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டில் இந்தியாவுக்கான நமீபிய தூதர் கேப்ரியல் பாண்டுரேனி சினிம்போ, நமீபியாவுக்கான வர்த்தக இணைப்பாளர் ஆஸ்கார் சிகண்டா, நமீபியா வர்த்தக ஆணையர் டாக்டர் பி.ராதாகிருஷ்ணன் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்


https://www.youtube.com/watch?v=EY6Bs1Zqviw&pp=sAQA

 

























இந்தியாவில் வர்த்தகத்திற்கான ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், வர்த்தகத்தில் வளர்ந்து வரும் ஆப்பிரிக்க நாடாக நமீபியா உள்ளது. இந்த நிலையில், நமீபிய வர்த்தக ஆணையர் டாக்டர் பி.ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் இந்தியா - நமீபியா வர்த்தக ஆணைய அலுவலகம், இருநாடுகளுக்கு இடையில் வலுவான வர்த்தக ஒப்பந்தங்களை உருவாக்கும்.  மேலும், புது டெல்லியில் உள்ள நமீபிய தூதரகத்தின் மூலம் நேரடியாக செயல்படும் இந்த அலுவலகம், நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு வர்த்தக வாய்ப்புகளைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டின் தொடக்க விழாவில் பேசிய நமீபிய தூதர் கேப்ரியல் பாண்டுரேனி சினிம்போ, இந்தியாவில் மருந்து மற்றும் சுகாதார தொழில்நுட்பம் மிகவும் சிறந்து விளங்கும் நிலையில், அதனை நமீபியாவிலும் கொண்டு வருவதே தங்களது முக்கிய இலக்காக இருக்கும் என்றார். அதேசமயம் நமீபியாவில் சிறந்து விளங்கும் விவசாயம், உணவு ஆகியவற்றை இந்திய நிறுவனங்களுக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment