Featured post

Dude Movie Review

Dude Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம dude படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது keerthiswaran .  Pradee...

Thursday, 12 August 2021

நடனப்புயல்' பிரபுதேவா நடிப்பில் - இயக்குனர் சந்தோஷ்

                     நடனப்புயல்' பிரபுதேவா நடிப்பில் - இயக்குனர் சந்தோஷ் பி                                     ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் 'பொய்க்கால் குதிரை'


'நடனப்புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்திற்கு 'பொய்க்கால் குதிரை' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

'ஹரஹர மகாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'கஜினிகாந்த்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனரும், 'இரண்டாம் குத்து' என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இவரது இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'பொய்க்கால் குதிரை'. இந்தப்படத்தில் 'நடனப்புயல்' பிரபுதேவா கதையின் நாயகனாக, ஒற்றைக்காலுடன் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் 'பிக்பாஸ்' பிரபலம் ரைசா வில்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். பல்லூ ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, டி. இமான் இசையமைக்கிறார்



ஆக்சன் எண்டர்டெய்ன்மெண்ட் ஜானரில் தயாராகும் இந்த படத்தை மினி ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் வினோத்குமார், டார்க் ரூம் பிக்சர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.



No comments:

Post a Comment