Featured post

Actor Karthi honours the Agricultural Community

 *Actor Karthi honours the Agricultural Community!* *Actor Karthi’s Uzhavan Foundation recognises and honours the icons in agriculture.* *Ac...

Thursday, 2 September 2021

பிக் பாஸ் புகழ் மஹத், ஐஸ்வர்யா, முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் "கெட்டவன்னு

 "கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா" படத்தில் வில்லனாக  அறிமுகமாகிறார்   நடிகர் ஆதவ் !








பிக் பாஸ் புகழ் மஹத், ஐஸ்வர்யா,  முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் "கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா". இப்படத்தில்   யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்கள்  நடிக்கின்றனர். ரொமான்ஸ் காமெடி வகையில் உருவாகும் இத்திரைப்படத்தில் அறிமுக நடிகர் ஆதவ் எதிர்மறை நாயகனாக நடிக்கிறார். 

இப்படத்தின் கதை, எதிர்மறை நாயகன் பாத்திரத்திற்கு  உடல் ரீதியாகவும்,   தோற்றத்திலும் ஒரு வலுவான எதிரியை கோரியதால், படக்குழு பொருத்தமான நடிகரை தேடி வந்தது. அந்த வகையில் ஆதவ் நன்கு கட்டமைக்கப்பட்ட உடல் தகுதியுடனும்,  கவர்ச்சிகரமான ஆளுமையுடனும்,  எதிர்மறை நாயகன் பாத்திரத்திற்கு மிகப்பொருத்தமானவராக அமைந்தார்.

பல திறமைகளைக் கொண்ட ஆதவ், நடிப்பு, மாடலிங், மேடை நாடக நடிப்பு, கால்பந்து, குத்துச்சண்டை, ஸ்டண்ட் என்று பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குபவர். 

இரண்டு ஆண்கள் (கதாநாயகன் மஹத் மற்றும் ஆதவ்), ஒரே பெண் (ஐஸ்வர்யா தத்தா) மீது காதலில் விழுகிறார்கள். அதில் நாயகி ஆதவ் பாத்திரத்திற்கு நிச்சயிக்கப்பட்டிருக்க,  ஆளுமை மிக்க அந்த எதிர் நாயகனை கடந்து, நாயகன் எவ்வாறு காதலியை கரம்பிடிக்கிறான் என்பதே கதை. பல முன்னணி கலைஞர்கள்   பங்களிப்பில் காதல் காமெடி கலந்த அட்டகாசமான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது

No comments:

Post a Comment