Featured post

உலக உணவு தினத்தை முன்னிட்டு, உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும்

 *உலக உணவு தினத்தை முன்னிட்டு, உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்தார் !!* ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷ...

Sunday, 15 January 2023

பொங்கல் விழாவை முன்னிட்டு நடிகர் மெட்ரோ ஷிரிஷ், 150 ஆட்டோ ஓட்டுநர்கள்

 பொங்கல் விழாவை முன்னிட்டு நடிகர்  மெட்ரோ ஷிரிஷ்,  150 ஆட்டோ ஓட்டுநர்கள்  குடும்பத்திற்கு பொங்கல் மளிகை பொருட்கள் வழங்கியுள்ளார் !   


தமிழின் இளம் நடிகர் மெட்ரோ ஷிரிஷ்,  இந்த பொங்கல் நன்நாளில் ஆட்டோ ஓட்டுநர்கள் 150 பேர் குடும்பத்திற்கு பொங்கல் பொருட்களும் மளிகை பொருட்களும் வழங்கியுள்ளார்.  


தமிழில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் மெட்ரோ ஷிரிஷ்.  “மெட்ரோ”  படம் மூலம் நல்ல  நடிகர்  எனும் பாராட்டை குவித்த இவர் வெறும் நடிப்பிற்காக மட்டுமின்றி, அவரது நற்பண்புகளுக்காகவும் பரவலாக பாராட்டை பெற்று வருகிறார்.  கொரோனா கால கட்டத்தில்  பல மருத்துவ முகாம்களை தன் சொந்த செலவில் நடத்தினார். சமீபத்தில் தமிழ்நாட்டின் இரண்டு சிலம்பம் சாம்பியன்களுக்கு,  சர்வதேச போட்டியில் கலந்து கொள்வதற்கான உதவிகளை செய்தார். 










இவ்வாறாக சமூகத்தில் தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார் ஷிரிஷ். அவரது இந்த குணங்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர். தற்போது பொங்கல் நன்நாளில் அனைவரும் இன்பமுடன் கொண்டாடும் பொருட்டு, ஆட்டோ ஓட்டுநர்கள் 150 பேர் குடும்பத்திற்கு பொங்கல் பொருட்களும் மளிகை பொருட்களும் வழங்கியுள்ளார்.  


நடிகர் மெட்ரோ ஷிரிஷ் தற்போது இயக்குநர், தயாரிப்பாளர்  கண்ணண்  இயக்கத்தில், நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் ஹாரர் காமெடி படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார். இறுதிக்கட்டத்தில் உள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

No comments:

Post a Comment