Featured post

Mark Your Calendars: Prabhas starrer 'Kalki

 *Mark Your Calendars: Prabhas starrer 'Kalki 2898 AD' to hit theatres on 27th June 2024* This year's highly-anticipated sci-fi ...

Tuesday 10 January 2023

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர்

 *தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அப்பாஸ் கல்ச்சுரல் வழங்கும் ஸ்ரீராம் பிராபர்டீஸ் 31-ம் ஆண்டு கலை விழாவை துவக்கி வைக்க உள்ளார்*


*ஜனவரி 13 வெள்ளி முதல் ஜனவரி 22 ஞாயிறு வரை, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் பிரபல கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்*


தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாண்புமிகு டாக்டர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அப்பாஸ் கல்ச்சுரல் வழங்கும் ஸ்ரீராம் பிராபர்டீஸ் 31-ம் ஆண்டு கலை விழாவை ஜனவரி 13 அன்று சென்னையில் துவக்கி வைக்க உள்ளார். 


ஜனவரி 13 வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 22 ஞாயிற்றுக்கிழமை வரை, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் பிரபல கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 


அப்பாஸ் கல்ச்சுரல் சென்னை நகரில், நன்கு அறியப்பட்ட நுண்கலைகளை ஊக்குவிக்கும் ஓரு நிறுவனம். கடந்த 41 ஆண்டுகளாக, 2500-க்கும் மேற்பட்ட நாடகம், நாட்டியம், கர்நாடக மற்றும் மெல்லிசை நிகழ்ச்சிகளுக்கு ஊக்கமளித்து, பல்வேறு துறைகளின் முன்னணி கலைஞர்களோடும் கைகோர்த்து, நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். 


ஆண்டுக்கொரு முறை நிகழும் அப்பாஸ் கலைவிழா, கடந்த 30 ஆண்டுகளாக சிறப்புற நடைபெற்று வருகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் நடப்புது போல், இந்த ஆண்டும் ஜனவரி 13 முதல் 22 வரை, தொடர்ந்து 10 நாட்களுக்கு, தினமும் பிற்பகல் 2 மணி, 4.15 மணி மற்றும் இரவு 7.00 மணிக்கு, மூன்று நிகழ்ச்சிகள், சென்னை தியாகராயநகரில் அமைந்துள்ள வாணி மகால் கலையரங்கில் நடைபெற உள்ளன.


முன்னணி கர்நாடக சங்கீத கலைஞர்களான சுதா ரகுநாதன், நித்யஸ்ரீ மகாதேவன், ஓ. எஸ். அருண், ராஜேஷ் வைத்யா, சூர்ய காயத்ரி, ரஞ்சனி-காயத்ரி, ஸ்பூர்த்தி ராவ், திருச்சூர் சகோதரர்கள், ராமகிருஷ்ண மூர்த்தி, ஷ்ரவன், சாய் விக்னேஷ் மற்றும் விசாகா ஹரி, அவர்கள் வழங்கும் “கண்ணனும் கவித்துவமும்” என்னும் இசைச் சொற்பொழிவும், திரை இசை பாடகர்களான SPB சரண், மது பாலகிருஷ்ணன் ஆகியோரின் பிரமாண்டமான திரை இசை விருந்தும், மேலும் ஷீலா உன்னிகிருஷ்ணன் அவர்களின் “சிவமயம்” என்னும் பிரமிக்க வைக்கும் நாட்டிய நாடகமும், பிரபல நடனக் கலைஞரான ருக்மணி விஜயகுமார் அவர்களின் “நாயகி” என்னும் நடன நிகழ்ச்சியும், ஆச்சார்யா நந்தினி சுரேஷ் அவர்களது இயக்கத்தில் "கோதையின் பாவையும், பாவையரும்” என்னும் ஆண்டாள் நாச்சியார் பற்றிய நடன நாடகமும், மற்றும் வளர்ந்து வரும் இளம் இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும் இடம் பெற உள்ளன.


அப்பாஸ் கல்ச்சுரல் சார்பில், இந்த 31-ஆம் ஆண்டு வருடாந்திர கலைவிழா நிகழ்ச்சிகளை வருகிற 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில், மேதகு தெலுங்கானா மாநில மற்றும் புதுவை துணை நிலை ஆளுநர் திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் குத்து விளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைக்கிறார்கள். 


இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக, வருமான வரி துறை தலைமை ஆணையாளர் திரு. தேபேந்திர நாராயண் கர், சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி திரு. கேவிகே ஶ்ரீராம், மூத்த நடிகர் திரு ஒய் ஜி மகேந்திரா, மற்றும் பிரதான விளம்பரதாரர்களான ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் நிர்வாக இயக்குநர், திரு. முரளி மலையப்பன் அவர்கள், வாணி மகால் அரங்கத்தின் தலைவர் திரு. டெக்கான் மூர்த்தி அவர்கள், லஷ்மி கேன்சர் சிகிச்சை அறக்கட்டளையின் அறங்காவலர், டாக்டர். தயாளன் அவர்கள், மூத்த பத்திரிகையாளர், திரு. ரமேஷ் அவர்கள், சங்கரா பால வித்யாலயா பள்ளியின் தாளாளர், திரு. வேதசுப்பிரமணியம் அவர்கள், பெஸ்டன் பம்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், திரு. ரமணி அவர்கள் ஆகியோர் கலந்து கொள்ளகின்றார்கள். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை அப்பாஸ் கார்த்திக் கவனித்து வருகிறார். 


இந்த கலைவிழாவிற்கான டிக்கெட்டுகள் bookmyshow.com மற்றும் abbascultural.com என்ற இணைய தளங்களில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 97106 33633 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

இந்த கலைவிழா ஸ்ரீராம் பிராபர்டீஸ், பெஸ்டன் பம்புகள், அப்பல்லோ மருத்துவமனை, தினமலர், விகடன், இந்தியன் வங்கி, கோடக் லைப், பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஆயில், தி.நகர் எல்.கே.எஸ். கோல்ட் ஹவுஸ், கோ-ஆப்டெக்ஸ், காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ், மெட்டல் பிராடக்ட்ஸ், கிரி டிரேடிங், அக்கார்ட் ஹோட்டல், சுப்ரீம் பர்னிச்சர், நந்தினி ஸ்வீட்ஸ், கோபுரம் பூசு மஞ்சள் தூள் மற்றும் பலரது ஆதரவுடன் நடைபெறுகிறது.

***

No comments:

Post a Comment