Featured post

Horror Is the New Humor': India’s Biggest Superstar Prabhas' First Horror-Comedy

 *Horror Is the New Humor': India’s Biggest Superstar Prabhas' First Horror-Comedy The Raja Saab Drops Thrilling Motion Poster* *Pra...

Tuesday 12 September 2023

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் தயாரிப்பில், சி.எஸ்.

 *இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் தயாரிப்பில், சி.எஸ். அமுதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'ரத்தம்' திரைப்படம் அக்டோபர் 6 அன்று வெளியாகிறது!*




தனது தனித்துவமான கதைத் தேர்வினால், பாக்ஸ் ஆஃபிசில் வசூல் நாயகனாக மாறியுள்ள நடிகர் விஜய் ஆண்டனியின் அடுத்தத் திரைப்படமாக 'ரத்தம்' வெளியாக உள்ளது. இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் தயாரிப்பில் சி.எஸ். அமுதன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கும் இந்தத் திரைப்படம் செப்டம்பர் 28 ஆம் தேதியில் இருந்து வெளியீட்டை அக்டோபர் 6 ஆம் தேதிக்கு அறிவித்துள்ளது.


'தமிழ் படம்' படத்தின் பிரம்மாண்ட வெற்றி மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த இயக்குநர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் வித்தியாசமான பொலிடிகல் திரில்லர் திரைப்படமாக 'ரத்தம்' உருவாகியுள்ளது. விஜய் ஆண்டனியுடன் இணைந்து மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த 'ரத்தம்' திரைப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, TS.சுரேஷ் படத்தொகுப்பு செய்கிறார். கண்ணன் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். செந்தில் ராகவன் கலை இயக்குநராகப் பணியாற்றி இருக்க, திலிப் சுப்ராயன் ஸ்டன்ட் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு 'ரத்தம்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி மூன்று மில்லியன் பார்வைகளை தாண்டி யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது. விஜய் ஆண்டனியின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள 'ரத்தம்' படம் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகும் என்பதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. 


*நடிகர்கள்:* விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் மற்றும் பலர்.


*தொழில்நுட்பக் குழு விவரம்*:

எழுத்து, இயக்கம்: சி.எஸ். அமுதன்,

ஒளிப்பதிவு: கோபி அமர்நாத், 

படத்தொகுப்பு: டி.எஸ். சுரேஷ்,

இசை: கண்ணன் நாராயணன், 

கலை இயக்குநர்: செந்தில் ராகவன்,

ஸ்டண்ட்: திலீப் சுப்ராயன்,

பப்ளிசிட்டி டிசைன்: சந்துரு- தண்டோரா,

டிஜிட்டல் புரோமோஷன்: டிஜிட்டலி,

No comments:

Post a Comment