Featured post

Predator Badlands Movie Review

 Predator Badlands Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம predator badlands படத்தோட review அ தான் பாக்க போறோம். இது predator series ஓட 7 p...

Friday, 6 October 2023

மத்திய கிழக்கில் #1 இந்தியப் படமாக உருவெடுத்த ஜவான், ஐக்கிய அரபு

 *மத்திய கிழக்கில் #1 இந்தியப் படமாக உருவெடுத்த ஜவான், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் $16 மில்லியன் வசூலைக் கடந்த முதல் படம் என்ற பெருமையைப் பெற்றது.*



நடிகர் ஷாருக்கானின் ஆக்‌ஷன் எண்டர்டெய்னர்  படமான ஜவான் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதமாகிய நிலையில், பார்வையாளர்கள் மத்தியில் படத்தின் மீதான கிரேஸ் எந்த வகையிலும் குறையவில்லை. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் படம் ஒன்றன் பின் ஒன்றாக புதிய சாதனைகளை படைத்து வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் தனது வலுவான முத்திரையை பதித்த ஜவான், தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சந்தையிலும் ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்துள்ளது.  இப்படம் மத்திய கிழக்கில் #1 இந்திய திரைப்படமாக வசூலில் சாதனை படைத்துள்ளது. 


*சர்வதேச விநியோக சந்தையின் துணைத் தலைவர் நெல்சன் டிசோசா இது குறித்து கூறுகையில்..,* ஜவான் சர்வதேச சந்தைகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது மற்றும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு, மத்திய கிழக்கில் $16 மில்லியனைத் தாண்டிய முதல் இந்தியத் திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. இன்றுவரை வெளிநாடுகளில் 44.43 மில்லியன் வசூல் செய்து #1 இந்திய திரைப்படமாக வரலாற்று சாதனை படைத்துள்ளது. இத்தனை பெரிய வரவேற்பையும் வசூலையும்  இதற்கு முன்பு பார்த்ததே இல்லை, மேலும் ஷாருக்கான் நடிப்பில் அடுத்த வரக்கூடிய டன்கி  இன்னும் பல  புதிய சாதனைகள் படைக்குமென  எதிர்பார்க்கிறோம்!  என்றார். 


ஐக்கிய அரபு அமீரக சந்தையில் ஜவான் தனது மாயாஜாலத்தை நிகழ்த்தி வருகிறது. இப்படம் $16 மில்லியனைத் தாண்டிய முதல் படமாகி, மத்திய கிழக்கு நாடுகளில் #1 இந்தியப் படமாக மாறியுள்ளது. . 'ஜவான்' பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதுடன், பல புதிய மைல்கற்களை எட்டி வருவது, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடமிருந்து பெற்ற அபரிமிதமான அன்பை காட்டுகிறது. 'ஜவான்' சந்தேகத்திற்கு இடமின்றி திரையுலகில் ஒரு வரலாற்று சாதனையாக மிளிர்கிறது.


“ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. 



https://www.instagram.com/p/CyA6pxXogBS/?igshid=MTc4MmM1YmI2Ng==

No comments:

Post a Comment