Featured post

En Kadhale Movie Review

En Kadhale Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம என் காதலே ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். jayalakshmi கதை எழுதி இந்த படத்தை dire...

Monday, 9 October 2023

இறுகப்பற்று படத்திற்கு 2ஆம் நாளிலிருந்து காட்சிகள் அதிகரிப்பு

*இறுகப்பற்று படத்திற்கு 2ஆம் நாளிலிருந்து காட்சிகள் அதிகரிப்பு*










*பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி இறுகப்பற்று ; தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு பெருமிதம்*


தொடர்ந்து ரசிகர்களை கவரும் விதமான கருத்தாக்கம் கொண்ட   படங்களை தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடாக 'இறுகப்பற்று' திரைப்படம் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி வெளியானது.


இன்றைய இளைஞர்கள் குடும்ப வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் அவற்றை எளிதாக களையும் விதம் பற்றியும் தெளிவாக அலசி இருந்த இப்படம் வெளியான முதல் நாளிலிருந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.


அதற்கு அத்தாட்சியாக இரண்டாவது நாளிலிருந்து அனைத்து திரையரங்குகளிலும் 'இறுகப்பற்று' படத்திற்கான காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.


படத்திற்கு கிடைத்துள்ள இந்த வரவேற்பு குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "'இறுகப்பற்று' திரைப்படம் வார இறுதி நாட்களில் மிகச்சிறப்பாக முன்னேறி வருகிறது. முதல் நாளிலிருந்து இரண்டாவது நாளிலேயே 225% வளர்ச்சியை பெற்றுள்ளது. பார்வையாளர்கள் எப்போதுமே நல்ல படைப்புகளுக்கு ஆதரவு தர தவறியது இல்லை. ஒரு பிளாக்பஸ்டர் வெற்றி தயாராகிறது.." என்று கூறியுள்ளார்.


யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்ணதி, சானியா ஐயப்பன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.



- Johnson PRO

No comments:

Post a Comment