Featured post

Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on

 *Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on 21st November, 2025 in English, Hindi, Ta...

Monday, 16 October 2023

உலக உணவு தினத்தை முன்னிட்டு உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும்

 *உலக உணவு தினத்தை முன்னிட்டு உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் !!*






ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம் கடந்த நான்கு வருடங்களாக உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு அவர்களின் இடத்தைத் தேடிச்சென்று உணவளிக்கும் திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தியா தன்னிறைவு அடைந்ததாக சொல்லப்பட்டாலும், இன்றும் இந்நாட்டில் உணவற்று தவிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. உலக பட்டினி குறியீட்டில் இன்றும் இதனை மாற்றும் முனைப்பில் திரு ஆலன் அவர்கள் இந்த தொண்டு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார். உணவற்ற ஏழைகளுக்கு ஒரு வேளை உணவளிக்க வெறும் 35 ரூபாய் தான் செலவாகிறது.  நாம் மனது வைத்தால் உணவில்லாமல் தவிப்பவர்கள் நிலையை மாற்ற முடியும். 


இந்நிறுவனத்தின் சார்பில்  உலக உணவு தினத்தன்று வருடா வருடம் ஒரு நிகழ்வு நடத்தப்படுகின்றது. இந்நிகழ்வில் 5000 க்கு பேருக்கு  பிரியாணி உணவு சமைத்து காஞ்சிபுரம், செங்கல் பட்டு, சென்னை சுற்றுவட்டார பகுதிகளில், 150க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவன செயல்பாட்டாளர்கள் வாகனங்கள் மூலம் நேரில் சென்று உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உணவளித்து வருகிறார்கள்.  


ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நடத்திய இந்த வருட நிகழ்வினில்.. ஜெர்மனியி அரசு  ஆலோசகர் ஜெனரல் மைக்கேலா குச்லர்,  காவல் உதவி ஆணையர் (அடையாறு வட்டம்) - திரு. நெல்சன்,  துணை ஆட்சியர் - திருமதி ப்ரீத்தி பார்கவி, நடிகர் சந்தோஷ் பிரதாப் மற்றும் நடிகை சனம் ஷெட்டி ஆகியோருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டு, கொடியசைத்து இந்நிகழ்வை துவக்கி வைத்தார். 


இந்நிகழ்வினில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது…

ஆலனை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும், ஆரம்பத்தில் சில விசயங்களை இணையத்தில் பகிரச்சொல்லி கேட்பார். பின்னர் அவர் செய்யும் விசயங்கள் பார்த்து பிரமித்தேன்.  அதன் பின் நானாகவே எனக்கு தெரிந்தவர்களிடம் ஆலனின் ஹெல்ப் ஆன் ஹங்கர்  பவுண்டேசன் பற்றிப் பகிர்ந்துகொள்ள ஆரம்பிதேன். இன்றைய சமூகத்தில் நமக்கு 35 ரூபாய் என்பது வெகு சாதாரணமான பணம் அது 35 ஆயிரம் கோடியாக தேவைப்படுபவர்களுக்கு சென்று சேர்வது ஆச்சர்யம்,  ஆனால் அந்த ஆச்சர்யம் நிகழ வேண்டுமெனில் அதற்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், 100, 200 ரூபாய் கூட இல்லை வெறும் 35 ரூபாய்  தான் நாம் கொடுக்கப்போகிறோம்.  இந்த நல்ல விசயம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதால் தான் இதில் கலந்துகொள்ள சம்மதித்தேன்.  இன்று மொய் விருந்து நடைபெறுகிறது.  மிக எளிமையானவர்களுக்கு தேடிச்சென்று  உணவளிக்கும் இந்த மாபெரும் செயல்பாட்டில் ஆலன் பல காலமாக இயங்கி வருகிறார். அவரது இந்த சமூகச்செயல்பாட்டை அனைவரும் பாராட்ட வேண்டும், அவர் என் நண்பர் என்பது பெருமையாக உள்ளது. எல்லோருக்கும் உணவளிக்கும் இந்த மிகப்பெரிய செயல்பாட்டில் நாம் அனைவரும் நம்மால் முடிந்த ஆதரவைத் தர வேண்டும். நான் என்றும் ஆலனுக்கு துணையாக இருப்பேன் அனைவருக்கும் நன்றி.

No comments:

Post a Comment