Featured post

நடிகர் அருண் விஜய்-யின் “ரெட்ட தல” திரைப்படம் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி

 *நடிகர் அருண் விஜய்-யின் “ரெட்ட தல” திரைப்படம் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!* BTG Universal நிறுவனத்த...

Thursday, 5 October 2023

சாய் சஹஸ்ரநாமம் தெலுங்கு புத்தகத்தை ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சி பி

சாய் சஹஸ்ரநாமம் தெலுங்கு புத்தகத்தை ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சி பி ராதாகிருஷ்ணன் சென்னையில் வெளியிட்டார்*





அமுத சுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், ஹரிஜன சேவக் சங்க தமிழ்நாடு மாநில தலைவர் பிடிக்கிட்டி மாருதி, திரைப்பட இயக்குநர் வசந்த் எஸ் சாய் ஆகியோர் நூலை பெற்றுக் கொண்டனர்


சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெய்சங்கர் தெருவில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'சாய் சஹஸ்ரநாமம்' புத்தகத்தின் தெலுங்கு பதிப்பை ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சி பி ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.


ஸ்ரீ ஷீரடி சாய் சேவா சமாஜ் தலைவர் பி ஸ்ரீநிவாஸ் இப்புத்தகத்தை தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார். புத்தகத்தின் பிரதிகளை ஆளுநரிடம் இருந்து அமுத சுரபி ஆசிரியர் திருப்பூர் டாக்டர் கிருஷ்ணன், ஹரிஜன சேவக் சங்க தமிழ்நாடு மாநில தலைவர் பிடிக்கிட்டி மாருதி, பிரபல திரைப்பட இயக்குநர் வசந்த் எஸ் சாய் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.


புத்தகத்தை சிறப்பாக மொழிபெயர்த்த ஆசிரியர் ஸ்ரீநிவாஸை ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். பயனாளிகளுக்கு கல்வி உதவிகளையும் அவர் வழங்கினார்.


ஸ்ரீ ஷீரடி சாய் சேவா சமாஜ் செயலாளர் எஸ் ஶ்ரீநிவாசன் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நூலின் ஆசிரியர் பி ஸ்ரீநிவாஸ் நன்றி கூறினார். அகில பாரத சாய் சேவா சமாஜ் முன்னாள் செயலாளர் எஸ் சேஷாத்ரி, சமூக சேவகர் சி கோபாலன் ஆகியோர் பேசினர். ரத்தினம் ராஜகோபாலன் நன்றியுரையாற்றினார்.




***

No comments:

Post a Comment