Featured post

7 Wonder Star Women South India 2023

 *7 Wonder Star Women South India 2023 organized by Indian Media Works Mr. John Amalan & presented by Indian Womens Foundation* Click he...

Wednesday 11 October 2023

ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத் குமார் வழங்கும், இயக்குநர்

 *ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத் குமார் வழங்கும், இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் ’டிஎன்ஏ’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியுள்ளது!*

























’மனம் கொத்தி பறவை’, ’டாடா’, ’கழுவேத்தி மூர்க்கன்’ போன்ற பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றிப் பெற்ற பல படங்களைக் கொடுத்த ஒலிம்பியா மூவிஸ் எஸ் அம்பேத் குமார், இப்போது தனது அடுத்த படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளார். க்ரைம்-டிராமா ஜானரில் உருவாக இருக்கும் இந்தப் படத்திற்கு ’டிஎன்ஏ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் முதல் முறையாக அதர்வா முரளியுடன் இந்தப் படத்தின் மூலம் இணைகிறது.


'ஒரு நாள் கூத்து’, ’மான்ஸ்டர்’ மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’ஃபர்ஹானா’ போன்ற சிறந்தப் படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்டோபர் 11, 2023) பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 


குடும்ப பார்வையாளர்களின் மனதை வென்ற நடிகர் அதர்வா முரளிக்கு இந்தத் திரைப்படம் மற்றுமொரு பாராட்டுக்குரியதாக நிச்சயம் இருக்கும். சமீபத்தில் வெளியான ‘சித்தா’ படத்தில் தனது அசத்தலான நடிப்பால் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் இதயங்களை வென்ற நடிகை நிமிஷா சஜயன், இந்தப் படத்தில் அதர்வா முரளிக்கு ஜோடியாக கதாநாயகியாக நடிக்கிறார்.


முழு படமும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது மற்றும் திட்டமிட்டபடி குறுகிய காலத்தில் விரைவாக முடிவடையும். மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

No comments:

Post a Comment