Featured post

Friends Magic Films முதல் முறையாக தயாரிக்கும் production No 1 .

 Friends Magic Films முதல் முறையாக தயாரிக்கும் production No 1 . திரைப்பட கல்லூரி மாணவரும் இயக்குனருமான திரு  N.L.Sri இயக்கும் இரண்டாவது படம...

Tuesday, 10 October 2023

வரலாறு படைத்த ஜவான்! ஷாருக்கானின் மெகா பிளாக்பஸ்டர் “ஜவான்”

 *வரலாறு படைத்த ஜவான்! ஷாருக்கானின் மெகா பிளாக்பஸ்டர் “ஜவான்” திரைப்படத்தினை 3.50 கோடி பார்வையாளர்களை கண்டுகளித்துள்ளனர்; 2023 இல் ஒரு இந்தியத் திரைப்படம் செய்த  உட்சபட்ச  சாதனை இது !!*

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவரும்  படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சாதனைகளை படைத்து வருகிறது.  ஜவான் படம் வெளியானதில் இருந்தே பல  வரலாற்று சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது, அந்த சாதனை  மகுடத்தில் மேலும் ஒரு இறகு சேர்ந்துள்ளது, ஜவான் திரைப்படத்தினை இது வரை திரையரங்குகளில்  3.50 கோடி பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர்.  2023-ல் ஒரு இந்தியத் திரைப்படம் செய்த  உட்சபட்ச  சாதனை இதுவாகும். 





ஜவான் வெளியானது முதலே திரையரங்குகளில்  ஹவுஸ்ஃபுல் போர்டுகளாக நிரம்பி வழிகிறது. இந்த ஆக்‌ஷன் எண்டர்டெயினரைக் காண ஏராளமான பார்வையாளர்கள் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர். இப்படத்தை ஒருமுறை மட்டுமல்லாமல், பலமுறை படத்தை ஏராளமானோர் பார்த்துள்ளனர். இதனால் இன்று படம் திரையரங்குகளில் 3.50 டிக்கெட் விற்பனையைக் கடந்து சாதனை செய்துள்ளது. 2023ல் ஒரு இந்தியத் திரைப்படத்திற்கான அதிகபட்ச சாதனை இதுவாகும். ஜவான் பாக்ஸ் ஆபிஸில் மட்டுமல்ல, பார்வையாளர்களின் இதயங்களிலும் தடுக்க முடியாத சக்தியாக இருப்பதையே இது காட்டுகிறது.


“ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

No comments:

Post a Comment