Featured post

PANORAMA STUDIOS PARTNERS WITH PEN STUDIOS TO ACQUIRE WORLDWIDE

 *PANORAMA STUDIOS PARTNERS WITH PEN STUDIOS TO ACQUIRE WORLDWIDE THEATRICAL AND DIGITAL RIGHTS OF THE MOST ANTICIPATED MALAYALAM FILM— DRIS...

Saturday, 14 October 2023

அரசு பள்ளியின் கோரிக்கையை நிறைவேற்றிய நடிகர்

அரசு பள்ளியின் கோரிக்கையை நிறைவேற்றிய நடிகர் விஷால்

ஆகஸ்ட் மாதம் நடிகர் விஷால் அவர்களின் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட வாரியாக ஒன்றியம், நகரம் பகுதி மற்றும் மற்ற மாநிலங்களான பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக, கேரளா மற்றும்  மும்பை ஆகிய இடங்களிலும் உள்ள மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர்கள்  நடிகர் விஷால் அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சியாக ஆதரவற்ற முதியோர்கள், குழந்தைகள் இல்லம், மாணவ, மாணவியர்கள் மற்றும் மக்களுக்கு பயன்பெறும் வகையில் நலத்திட்ட, நற்பணி விழாக்களை ஏற்பாடு செய்து நடத்தினார்கள். 


அதன் அடிப்படையில் மத்திய சென்னை மாவட்டம் புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அரசு A.I.W.C உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு நல திட்ட நற்பணி விழா நடைபெற்ற போது. அப்பள்ளியின் நிர்வாகத்தின் கோரிக்கையாக நடிகர் விஷால் அவர்களுக்கு பள்ளி மாணவ, மாணவியர்கள் தொலைநோக்கு பாடத்திட்டங்களை கற்பதற்கு தொலைக்காட்சி (Android TV) தேவைப்படுகிறது. ஏற்கனவே எங்கள் பள்ளியில் செயல் பட்டு வந்த தொலைக்காட்சி (Android TV) திருடப்பட்ட நிலையில் அருகில் உள்ள காவல் துறையில் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை, 

அரசு தரப்பிலும் எந்த பொறுப்பும் இல்லை, எனவே உங்களுடைய தேவி அறக்கட்டளை சார்பில் தொலைக்காட்சி (Android TV) வேண்டி கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அக்கோரிக்கை நடிகர் விஷால் அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்று உடனே நடிகர் விஷால் அவர்கள் அப்பள்ளிக்கு பெரிய தொலைக்காட்சி (Android TV) வழங்கியுள்ளார்.  


பள்ளி நிர்வாகத்தின் கோரிக்கையை நிறைவேற்றிய நடிகர் விஷால் அவர்களுக்கு ஆசிரியர் பெரும்மக்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் வாழ்த்து  தெரிவிப்பதுடன்,


நடிகர் விஷால் அவர்களுக்கு அப்பள்ளி மாணவ, மாணவியர்கள் அவர்களால் தயாரிக்கப்பட்ட கை வண்ண பொருட்களை வழங்கியதை பெற்றுக்கொண்ட நடிகர் விஷால் அவர்கள் மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து காணொலி பதிவு அனுப்பியும் உள்ளார்.

No comments:

Post a Comment