Featured post

WITH THE SUPPORT OF THE GOVERNMENT OF TAMIL NADU OUR HONOURABLE CHIEF MINISTER THIRU M.K. STALIN

 *WITH THE SUPPORT OF THE GOVERNMENT OF TAMIL NADU OUR HONOURABLE CHIEF MINISTER THIRU M.K. STALIN AND HONOURABLE DEPUTY CHIEF MINISTER THIR...

Wednesday, 4 October 2023

Irugapatru Movie Review

 இறுகப்பற்று, Irugapatru Movie Review


வணக்கம் மக்களே, இன்னைக்கு நாம பாக்க போறது ' யுவராஜ் தயாளன்' இயக்கத்தில்  வெளியாகியுள்ள 'இறுகப்பற்று' படத்தோட review. போட்டா போட்டி, தெனாலிராமன், எலி போன்ற பல படங்களை இயக்கியவர்.

இந்த படத்தோட மியூசிக் டைரக்டர் ஜஸ்டின் பிரபாகரன்.

இந்த படத்துல விக்ரம் பிரபு, ஸ்ரதா ஸ்ரீநாத், விதார்த், அபர்னிதி, ஸ்ரீ, சானியா ஐயப்பன் போன்ற பலர் நடிச்சிருக்காங்க. சானியா ஐயப்பன் நிறைய மலையாளம் படங்கல்ல நடிச்சிருக்காங்க. 

இந்த படத்தோட கதை என்னன்னா கல்யாணம் ஆனா மூணு தம்பத்திகளுக்கு  இடையே நடக்கிற பிரச்சனைகளும் அதை எப்படி அவங்க கையால்ராங்க   அப்படிங்கறது தான்.

விக்ரம் பிரபு, மனோகர் கேரக்டர்ல  நடிச்சிருக்குறாரு . அவருடைய மனைவியா ஸ்ரெதா ஸ்ரீநாத், மித்ரா கேரக்டர்ல நடிச்சிருக்காங்க. அவங்க ஒரு மேரேஜ் கவுன்சிலர்.

விதார்த், ரங்கேஷ் கேரக்டர்ல ஒரு IT employeeயா நடிச்சிருக்காரு. அபர்னிதி அவங்களோட மனைவியா பவித்ரா கேரக்டர்ல நடிச்சிருக்காங்க.

ஸ்ரீ, அர்ஜுன் கேரக்டர்லயும், சானியா ஐயப்பன், திவ்யா கேரக்டர்லயும் கணவன் மனைவியா நடிச்சிருக்காங்க.

அர்ஜுனும் திவ்யாவும் லவ் பண்ணி கல்யாணம்   பண்றாங்க. கல்யாணத்துக்கு அப்புறம் ரெண்டு பேருக்கும் இடையே நிறைய misunderstanding வருது. எல்லா விஷயத்துலயும் ரொம்ப விரக்தி அடையுறாங்க. லவ் பண்ணும் போது இருந்த அன்பு கல்யாணத்துக்கு அப்புறம் அவங்களுக்கிடையே இல்லனு நினைக்குறாங்க.

இரண்டாவது தம்பதிகள் பத்தி சொல்லனும்னா ரங்கேஷ், ஒரு IT employee பவித்ரா அவங்களோட மனைவி. குழந்தை பிறந்த அப்புறம், பவித்ராவோட உடல் எடை அதிகமானதால அவங்களுக்கு இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் வருது. விவாகரத்துதா ஒரே முடிவுனு நினைக்கிறாங்க. மூன்றாவது தம்பதி  மனோகர் மற்றும் மித்ரா. மித்ரா ஒரு மேரேஜ் கவுன்சிலர். அவங்க வீட்லயும், கவுன்சில்லோர் மற்றும் ஒரு சைக்காலஜிஸ்ட் மாதிரி அவரோட கணவர் கிட்ட நடந்துக்கறதுனால அவங்களுக்குள்ளேயும் நிறைய கருத்து வேறுபாடுகள் வருது.இந்த மூணு தம்பதிகளை சுத்தி தான் கத நகருது. மூணு தம்பதிகளும் ஒருத்தருக்கு ஒருத்தர் அவங்களோட தவறுகளை புரிஞ்சு ஒன்னா சேர்ந்தாங்களா இல்ல அவங்களுக்கிடையே விவாகரத்து ஆனதா அப்படிங்கறது தான் மீதி கதை.இந்த படத்தை பார்க்கும் போது இந்த கால தம்பதிகளுக்கு இடையே நடக்கிற பிரச்சனைய தெளிவா பாக்க முடியுது. மேலும் ஒரு சில காட்சிகளை பார்க்கும்போது நம்ம வீட்ல கணவன் மனைவிகளுக்கு இடையே நடக்கிற பிரச்சனையையும்,  நம்மளோட உறவினர்களுக்கு இடையே நடக்கிற பிரச்சனையும் கண் முன்னாடி காட்டுற மாதிரி இருக்கு.

இயக்குனர் தன்னோட கருத்துக்களை வெளிப்படுத்த ஒரு காட்சி வடிவத்தைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக,  உரையாடல் வடிவில உறவு ஞானத்தைப் சொல்லிக்காரு.  ஜஸ்டின் பிரபாகரனுடைய இசை அந்த உரையாடலுக்கு பலம் கொடுத்துருக்கு. அர்ஜுனும் திவ்யாவும் எதுக்கு காதலிச்சாங்க அந்த லவ்வ திரும்ப பெறுவதற்காக என்ன பண்றாங்க என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லி இருந்தா நல்லா இருந்திருக்கும். மனோகர் மற்றும் நித்ரா தம்பதிகளுக்கு இடையேயான உறவு இன்னும் கொஞ்சம் பலமாக காட்டி இருந்திருக்கலாம். ரங்கேஷ் மற்றும் பவித்ரா தம்பதியினருக்கு இடையே இருக்கும் உறவை ரொம்ப அருமையா காட்டியிருக்காங்க. மேலும் ரங்கேஷ் தன்னோட மன வேதனையை மித்ரா கிட்ட சொல்லும் போது, அவரோட உணர்வை நம்மளால முழுமையாக உணர முடியுது. சில நேரங்களில், ஒரு கஷ்டமான  காட்சியை காட்டும் போது  நகைச்சுவையைப் பயன்படுத்தியிருக்கார்.  எடுத்துக்காட்டாக, ஒரு கதாபாத்திரம் தன்னோட தவறை உணர்ந்து உடைந்து போவதை காட்டும் போது ஒரு காட்சியில், அவருக்கும் அவரது முதலாளியாகிய மறைந்த மனோபாலா அவருக்கும் இடையே உள்ள உரையாடல் ஒரு புன்னகை கலந்ததா இருக்கு. ஒவ்வொரு கேரக்டரும் அவங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை நல்லா நடிச்சிருக்காங்க. முக்கியமா அபர்னீதி அவங்க இந்த  படத்துக்காகவே உடல் எடை 75 கிலோ வர அதிகரிச்சிருக்காங்க. இந்த படத்தோட டீசர் ரொம்பவே வித்தியாசமா பண்ணி இருந்தாங்க. நிறைய தம்பதிகளை கூப்பிட்டு, அவங்களுக்கிடையே உள்ள புரிதல் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கிறதுக்கு, ஒரு வரிசையான சேர் போட்டு நடுவுல ரெண்டு பேரையும் உட்கார வைத்து, ஒரு ஒரு கேள்வியா கேக்குறாங்க. அவங்க கேட்கிற கேள்வியை பொறுத்து புரிதல் அதிகமா இருந்தா நெருக்கம் அதிகமாகவும் ஒரு ஒரு தவறான புரிதலுக்கும் ஒரு சேர் தள்ளியும் உட்காரும்படி சொல்றாங்க.இதுல கலந்துகிட்டு நிறைய தம்பதிகள் அவர்களுடைய புரிதல்ல தெரிஞ்சுகிட்டதாகவும், மிகவும் உணர்ச்சிகரமாக இருந்ததாகவும் சொன்னாங்க.

No comments:

Post a Comment