Featured post

Horror Is the New Humor': India’s Biggest Superstar Prabhas' First Horror-Comedy

 *Horror Is the New Humor': India’s Biggest Superstar Prabhas' First Horror-Comedy The Raja Saab Drops Thrilling Motion Poster* *Pra...

Tuesday 3 October 2023

THE CREATOR Movie Review

THE CREATOR Movie Review 


Hai, Hello friends, இப்போ நம்ம பாக்க போறது ஒரு பிரம்மிப்பான action thriller movie 'THE CREATOR", ஓட review.

Monsters, Rogue one-The star war story, போன்ற படத்த இயக்கிய director Gareth Edwards தான் இந்த படத்தோட இயக்குனர். உலகம் முழுக்க பேசப்படுற Artificial Intelligence தொழில்நுட்பத்தால உருவாகும் machines வச்சு தான் இந்த படம் எடுத்திருக்காங்க.இதுல main concept என்னன்னா Artificial intelligence machineக்கும் மனிதர்களுக்கும் இடையில நடக்கிற போர் தான்.


    இந்த படத்துல John David Washington, ரகசிய American soldierஆ , Joshua கேரக்டர்ல நடிச்சிருக்காரு.அவரோட மனைவியா Gemma chan,  maya கேரக்டர்ல நடிச்சிருக்காங்க. AI girlஆ Alphie கேரக்டர்ல, Madeleine yuna voylesங்கிற சின்ன பொண்ணு நடிச்சிருக்கா.

      இப்ப இந்த  படத்தோட கதை என்னன்னு பார்க்கலாம். ஆரம்பத்துல joshua, Asiaல ஒரு ரகசிய american soldierஆ இருக்காரு. அவருடைய areaல நடந்த ஒரு attackல அவரோட மனைவிய விட்டு பிரிஞ்சிடுறாரு.  அந்த attackல தன்னோட மனைவி இறந்துட்டதா நினைக்கிறார்.

ஐந்து வருடத்துக்கு அப்புறம் joshua திரும்பவும் வேலையில சேர வேண்டியதா இருந்தது.அவர AI super weapon ஆனா, Alphie அப்படிங்கற ஆறு வயது பொண்ண தேடி  கண்டுபிடிக்க நியமிச்சாங்க. Alphieங்கிறது, united states பாத்து பயப்புட்ற ஒரு Artificial Intelligence super weapon. Joshua, Alphieய எப்படியோ

கண்டுபிடிச்சிடுறாரு. சில USA soldierஸ் மூலமாக தன்னுடைய மனைவி உயிரோடு இருக்க வாய்ப்பு இருக்கிறதா தெரிய வருது. அதனால Alphieயோட சேர்ந்து தன்னுடைய மனைவியை தேடுற பயணத்தை ஆரம்பிக்கிறார்.

மனைவி maya,  New Asiaயாவில் உள்ள AI development ஓட கனெக்சன்ல இருக்குறாங்க. Colonel Howellஆ, Allison Janney நடிச்சிருக்காங்க. அவங்க New Asia யால இருந்து,  AI super weaponஅ  கண்டுபிடிக்க நியமிச்சவங்க. Colonelலோட இரண்டு மகன்களும் machinesனால இருந்துட்டாங்க. அதனால machinesஅ அழிக்கனும்னு ரொம்ப தீவிரமா இருந்தாங்க. Harun characterல, Ken watanabes நடிச்சிருக்காரு. அவர் ஒரு AI controlled Robot. ஆனா பாக்குறதுக்கு மனிதர்கள் மாதிரி இருப்பாரு. Harunக்கு கொடுக்கப்பட்ட வேலை என்னன்னா Alphieய Joshua கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு வரனும்.

Drew characterல, joshua ஓட frienda, Sturgill simpson நடிச்சுருக்காரு. New Asiaல joshuaக்கு undercover missionல உதவி பண்ணது இவர்தான். Alphieய பாதுகாப்பதற்கும் மனைவிய கண்டுபிடிக்கிறதுக்கும் திரும்ப drew கிட்ட joshua உதவி கேட்கிறார். Americaவும்  Asiaவும்,  Alphieங்கற AI superweapon யார்கிட்ட இருக்கோ அவங்க தான் போர்ல ஜெயிப்பாங்கன்னு நம்புனாங்க. அதனால தன்னோட armyல தான் Alphie இருக்கணும்னு ரெண்டு நாடும்  AI girl தேடுனாங்க.இறுதியாக யார் பக்கம் AI girl இருந்தா என்ன நடந்ததுங்கிறது தான் கிளைமாக்ஸ்.


Alphieக்கும் Joshuaக்கும் இடையே இருந்த emotions, machineக்கும்  மனிதனுக்குமான உறவ தாண்டி அப்பாவுக்கும் பொண்ணுக்கும்மான நெருக்கமா காட்டி இருக்காங்க. ஒரு சில காட்சிகள் நம்மள ரொம்பவே நெகிழ வைக்கிறது. படத்துல நடிச்ச ஒரு ஒரு கேரக்டரும் அவங்களோட நடிப்ப ரொம்ப திறமையா வெளிப்படுத்தி இருக்காங்க. சில நேரங்களில் நமக்கே மெஷின்ஸ் தானா இல்ல மனிதர்களான்னு நினைக்கிற அளவுக்கு ரொம்ப நெருக்கமா கதையோடு கொண்டு போய் இருக்காங்க.

 Visual effects and sound designs எல்லாமே ரொம்ப அருமையா இருக்கு. Cinematography and locations  எல்லாம் நம்மள பிரம்மிக்க வைக்குது. Hans zimmer ஓட classic rock songs படத்துக்கு ரொம்ப supportiveஆ இருக்கு. படத்த ஒரு காவியமா காட்டுது. Climaxla நம்மள வேர்க்க விறு விறுக்க seat நுனில உக்கார வச்சுருக்காங்க.

மொத்தத்துல THE CREATOR movie 2023 ஓட ஒரு சிறந்த  science fiction movie ஆ இருக்குறதுல எந்த சந்தேகமும் இல்ல.

No comments:

Post a Comment