Featured post

En Kadhale- Announcement of Release Date

 *En Kadhale-  Announcement of Release Date.* Sky wanders Entertainment, produced, written and directed by Jayalakshmi under the banner Sky ...

Saturday, 9 December 2023

கோவாவில் பிக் டாடி கப்பலில் நடைபெற்ற செவன் வொண்டர்

 *கோவாவில் பிக் டாடி கப்பலில் நடைபெற்ற செவன் வொண்டர்  ஸ்டார் வுமன் சவுத் இந்தியா 2023, நிகழ்ச்சியில் நடிகைகள், பிரபலங்கள் வானவில்லின் 7 வண்ணங்களில் உடையணிந்து விருதுகளை பெற்றனர்.*

Click here for video:

https://youtu.be/CWn0Qkta5wc?si=9bAE2faOYb00ow4u

கௌரவமிக்க, வண்ணமயமான இந்த நிகழ்ச்சி ஜான் அமலன் எண்ணத்தில் உருவாக,  இந்தியன் மீடியா ஒர்க்ஸ்  மற்றும் இந்திய மகளிர் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்தனர்.  


ஒவ்வொரு ஆண்டும் இந்தியன் மீடியா ஒர்க்ஸ் சமூக சேவை, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களின் மேம்பாடு  உள்ளிட்டவற்றில் பங்களிப்பு செய்துவரும் நபர்களை அங்கீகரித்து கௌரவிக்கிறது. 


 செவன் வொண்டர் ஸ்டார் வுமன் சவுத் இந்தியா 2023 என்பது தென்னிந்தியாவின் பல்வேறு பின்னணியில் உள்ள பெண்கள் மற்றும் பிரபலங்களை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டது. இதில் ஏழு தகுதிவாய்ந்த பெண்கள் வானவில்லின் ஏழு வண்ணங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து அந்நிறத்தில் உடைகளை அணிய வேண்டும்.


 அதன்படி,  சிவப்பு நிறத்தில் நடிகை சஞ்சிதா ஷெட்டி, ஆரஞ்சு நிறத்தில் நடிகை ஆஷ்னா ஜவேரி,

மஞ்சள் நிறத்தில் நடிகை ஜனனி, பச்சை நிறத்தில் மெஜந்தா குழும நிறுவனங்களின் மேலாண் இயக்குநர் ராக்கி ஷா, நீல நிறத்தில் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர். அல்மோஸ் சஜ்ஜத், இண்டிகோ நிறத்தில் நடிகை ரம்யா சுப்ரமணியன், வோய்லட் நிறத்தில் ஸ்டாண்டர்ட் காட்டன் இண்டஸ்ட்ரீஸ் மேலாண் இயக்குநர் அபர்ணா சுங்கு ஆகியோர் உடையணிந்து மேடையேறி விருதுகள் பெற்றனர். மேலும் அணிவகுப்பு மூலம் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment