Featured post

Maanbumigu Parai Movie Review

Maanbumigu Parai Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம manmubigu parai படத்தோட review அ தான் பாக்க போறோம். Leo Siva Kumar, Gayathri rema ...

Sunday, 19 May 2024

கல்கி 2898 கிபி படத்தின் எதிர்பார்ப்பு எகிற

 *கல்கி 2898 கிபி படத்தின் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துவிட்டது.  5வது சூப்பர் ஸ்டார் & பைரவாவின் நம்பகமான நண்பரான புஜ்ஜி 22 மே 2024 ல் அறிமுகமாகிறார் !!*



கல்கி 2898 கி.பி., படம் வெளியீடு நெருங்கி வரும் நிலையில்,  படத்தின் மீதான எதிர்பார்ப்பு உட்சகட்டத்தை எட்டியுள்ளது. கல்கி படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பரான புஜ்ஜியின் அறிமுகம் மே 22, 2024 அன்று வெளியாகவுள்ளது.  இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது


'From Skratch EP4: Building A Superstar' என்ற தலைப்பிலான கண்கவர் திரைக்குப் பின்னால் நம்மை ஒரு அசாத்தியமான காட்சி அனுபவத்திற்குள்  கூட்டிச் செல்கிறார் இயக்குனர் நாக் அஷ்வின்.  2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய இந்த பயணம் நம்மை வியக்க வைக்கிறது.  "சூப்பர் ஹீரோ", "பைரவாவின் சிறந்த நண்பன், " புஜ்ஜி"  என பில்ட் அப்கள், நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வத்தைத் தூண்டுகிறது. 


இது குறித்தான வீடியோ லிங்க்


https://www.youtube.com/watch?v=8eIq9BHs8lk


2 நிமிட 22 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, கேரேஜ் அமைப்பிலான செட்டிங்கில்,  பிரபாஸுடனான  சந்திப்பு  காட்சிகளைக் காட்டுகிறது, இது மே 22 ஆம் தேதி வெளியாகவுள்ள புஜ்ஜியின் பிரமாண்ட அறிமுகத்திற்கான ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கிறது.


சமீபத்தில் 2898 கி.பி கல்கியின் சாம்ராஜ்யத்தில்  அமிதாப் பச்சனின் அஸ்வத்தாமாவின் தோற்றம்,  ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளை ஒருங்கிணைத்து உண்மையான பான்-இந்திய டீஸராகக் அசத்தலால வெளியாகியுள்ளது இந்த டீசர். 



அற்புதமான படைப்பாளி நாக் அஸ்வின் இயக்கத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி போன்ற  இந்தியளவிலான முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில், வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், கல்கி 2898 AD இந்த ஆண்டின்  மிக முக்கிய படைப்பாக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.  இப்படம்   ஜூன் 27, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

No comments:

Post a Comment