Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Sunday, 19 May 2024

மாஸ் நாயகன் என்டிஆரின் 'தேவரா'

 *மாஸ் நாயகன் என்டிஆரின் 'தேவரா' திரைப்படத்தில் இருந்து அனிருத் ரவிச்சந்தர் இசையில் முதல் சிங்கிள் 'ஃபியர் சாங்' (fear song)  தற்போது வெளியாகியுள்ளது!*

மாஸ் நாயகன் என்டிஆர் நடித்த 'தேவரா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வேகத்தில் நடந்து வருகிறது. கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் உலக அளவில் பார்வையாளர்களைக் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை. பாலிவுட் அழகி ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். மற்றொரு பாலிவுட் நட்சத்திரமான சைஃப் அலிகான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் படத்தில் நடிக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகமான 'தேவரா பார்ட் 1' தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

என்டிஆர் பிறந்தநாள் கொண்டாட்டமாக படத்தில் இருந்து 'ஃபியர் சாங்' எனத் தலைப்பிடப்பட்டுள்ள முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அனிருத் பாடியிருக்க தெலுங்கில் சரஸ்வதி புத்ரா ராமஜோகய்யா சாஸ்திரி, தமிழில் விஷ்ணு எடவன், ஹிந்தியில் மனோஜ் முண்டாஷிர், கன்னடத்தில் வரதராஜ் மற்றும் மலையாளத்தில் மான்கொம்பு கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இந்தப் பாடலை எழுதியுள்ளனர். படத்தில் என்டிஆரின் மாஸ் மற்றும் பிறந்தநாளுக்கு இந்தப் பாடல் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக வந்துள்ளது. அனிருத்தின் காந்த குரலும் என்டிஆர்ரின் வலுவான திரையிருப்பும் 'பயத்தின் கடவுள்' என இந்தப் பாடலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து ஒவ்வொரு ரசிகரையும் திருப்திப்படுத்தியுள்ளது.

பாடல் மற்ற மொழிகளிலும் பிரமிக்க வைக்கிறது. பாடல் வீடியோவில் அனிருத் ரவிச்சந்தர் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பாடியிருக்கிறார்.  சந்தோஷ் வெங்கி கன்னடம் மற்றும் மலையாளத்தில் பாடியிருக்கிறார். 'தேவரா' படத்தின் புரோமோஷனுக்கு 'ஃபியர் சாங்' நல்ல தொடக்கம் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. உயர்தரமான தயாரிப்பு மதிப்புகள், ஈர்க்கும் காட்சிகள் மற்றும் பாடலில் என்டிஆரின் திரை இருப்பு ஆகியவை ஆல்பத்தின் மற்ற பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

கதாநாயகனாக என்டிஆர் நடிக்க  பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷைன் டாம் சாக்கோ மற்றும் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'தேவரா' திரைப்படம் என்டிஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ் தயாரிக்க, நந்தமுரி கல்யாண் ராம் வழங்குகிறார். மிக்கிலினேனி சுதாகர் மற்றும் ஹரி கிருஷ்ணா கே படத்தின் தயாரிப்பாளர்கள். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகவும், ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவாளராகவும், சாபு சிரில் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

No comments:

Post a Comment