Featured post

Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube

 *Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube* In an unprecedented move to democratize c...

Wednesday, 29 May 2024

துல்கர் சல்மான் நடிப்பில் வெங்கி அட்லூரி

 *துல்கர் சல்மான் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'லக்கி பாஸ்கர்' செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது!*



துல்கர் சல்மான் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். அவரது வசீகரமான ஆளுமை மற்றும் ஈடுசெய்ய முடியாத நடிப்புத் திறனுக்காக மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் மிகவும் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இப்போது, அவர் ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண கதையான 'லக்கி பாஸ்கர்' படம் மூலம் வசீகரிக்க வருகிறார்.


படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து படக்குழுவினர் தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து வருகின்றனர். மே 29 அன்று படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் செப்டம்பர் 27, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. 


'தோளி பிரேமா', 'சார்/வாத்தி' போன்ற பிளாக்பஸ்டர் படங்களை எழுதி, இயக்கிய வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சியும், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சாய் சௌஜன்யாவும் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர்.  ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை வழங்குகிறது. 


1980களின் பிற்பகுதி மற்றும் 1990களின் முற்பகுதியிலும் இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு எளிய வங்கி காசாளரான லக்கி பாஸ்கரின் சுவாரஸ்யமான மற்றும் அசாதாரணமான வாழ்க்கைப் பயணத்தை இந்தப் படம் விவரிக்கிறது. துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இப்படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. மேலும் இது தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment