Featured post

Sai Durgha Tej personally visited Amma Orphanage

 *Sai Durgha Tej personally visited Amma Orphanage to donate the promised amount* Supreme Hero Sai Durgha Tej is renowned for his compassion...

Thursday 23 May 2024

Zee5 இன் தலைமைச் செயலகம் சீரிஸ், 50

 Zee5 இன் தலைமைச் செயலகம் சீரிஸ், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை  !! 


இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங் தளமாக, ரசிகர்களால் கொண்டாடப்படும்  Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான   ‘தலைமைச் செயலகம்’ சீரிஸ், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்துள்ளது.


~ தமிழக அரசியல் களப் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரில்லர் சீரிஸான "தலைமைச் செயலகம்" சீரிஸ் கடந்த  மே 17ஆம் தேதி Zee5 தளத்தில் வெளியானது.~


தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் தயாரிப்பில் வெளிவந்த  "தலைமைச் செயலகம்"  சீரிஸ், தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையைக் கூறும் அழுத்தமான பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது.  8 கொண்ட பொலிடிகல்  சீரிஸில், முன்னணி நட்சத்திர நடிகர்களான கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 


ஒரு பெண்ணின் இடைவிடாத அதிகார வேட்கை, பேராசை, வஞ்சகம் ஆகியவை பின்னிப்பிணைந்த தமிழக அரசியலின் கதையைப் பரபரப்பாகச் சொல்கிறது இந்த சீரிஸ். 


நாடெங்கும் தேர்தல் ஜுரம் அடிக்கும் இந்த சூழ்நிலையில், ரசிகர்களுக்கு சரியான தீனியாக வெளியாகியுள்ள இந்த சீரிஸ், பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. நடிப்பு, இசை, உருவாக்கம், இயக்கம் எனத் தொழில்நுட்ப ரீதியில் அட்டகாசமான சீரிஸாக விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. 


"தலைமைச் செயலகம்" சீரிஸ், கடந்த மே 17 ஆம் தேதி வெளியான நிலையில்,  மிகக் குறுகிய காலத்தில், 50 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 


இந்த சீரிஸ் விமர்சகர்கள் மத்தியில் மட்டுமல்லாது, திரைப்பிரபலங்களிடமிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. 


இந்த சீரிஸ் குறித்து 

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது…

இப்போதுதான் @வசந்தபாலன் சார் இயக்கிய #தலைமைச்செயலகம் பார்த்தேன், இந்த அரசியல் சீசனுக்கான மிக அட்டகாசமான சீரிஸ்! 👏 ராதிகா மேமுக்கு பாராட்டுக்கள் ❤️❤️ கிஷோர் பிரில்லியண்ட், ஸ்ரீயா ரெட்டி மாம் 👍👍👏👏❤️ #Bharat. 


மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது…

வசந்த பாலன் மீண்டும் ஒரு தலைசிறந்த படைப்பை வழங்கியுள்ளார்! தலைமைச் செயலகம் இந்த அரசியல் சீசனில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய சீரிஸ். உழைத்த அனைவருக்கும் பெரிய வாழ்த்துக்கள்! Zee5 இல் கண்டுகளியுங்கள். 


பதபதவைக்கும் சஸ்பென்ஸ், சூழ்ச்சி மற்றும் சிலிர்க்க வைக்கும் உண்மைகளை வெளிப்படுத்தும் ‘தலைமைச் செயலகம்’  சீரிஸை  ZEE5 இல் பிரத்தியேகமாகக்  கண்டுகளியுங்கள் !

No comments:

Post a Comment