*கருணாஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'ஆதார்' படம் மலையாளத்தில் உருவாகிறது!*
*மலையாளத்தில் அறிமுகமாகும் இயக்குநர் ராம்நாத் பழனிகுமார்*
பல சர்வதேச விருதுகளை வென்று, ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பையும் பெற்ற, வெண்ணிலா கிரியேஷன்ஸ் பி. சசிகுமார் தயாரிப்பில், இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில், கருணாஸ் நடிப்பில் வெளியாகி, 2022 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த ஊடகத்தின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய 'ஆதார்' திரைப்படம் மலையாளத்தில் உருவாகிறது. இப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் மலையாளத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். தமிழில் உருவான 'ஆதார்' திரைப்படத்தில் அருண்பாண்டியன் நடித்த அழுத்தமான ரைட்டர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான திலீஷ் போத்தன் நடிக்கவிருக்கிறார்.
கருணாஸ் நடிப்பில் வெளியான 'திண்டுக்கல் சாரதி' எனும் வெற்றி பெற்ற படத்திற்கு திரைக்கதை & வசனம் எழுதியவர். ஜீவா- நயன்தாரா நடிப்பில் வெளியான 'திருநாள்', கருணாஸ் நடிப்பில் வெளியான 'அம்பாசமுத்திரம் அம்பானி' மற்றும் 'ஆதார்' ஆகிய திரைப்படத்தை இயக்கியவர் ராம்நாத் பழனிகுமார். இவரது திரைப்படங்களில் கதை சொல்லும் பாணி வித்தியாசமாக இருப்பதுடன் எளிய மனிதர்களின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகி இருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது.
கடந்த 2022 ஆம் ஆண்டில் கருணாஸ், அருண் பாண்டியன், பிரபாகர், உமா ரியாஸ் கான், ரித்விகா, இனியா, திலீபன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஆதார்'. இந்தத் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது.
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'கும்ப்ளாங்கி நைட்ஸ்', 'ஜோஜி', அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற 'பிரேமலு' ஆகிய படங்களின் தயாரிப்பாளர் - 'மகேஷிண்டே பிரதிகாரம்', 'ஜோஜி' ஆகிய வெற்றி பெற்ற படத்தை இயக்கிய இயக்குநர் - அறுபதிற்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்து நட்சத்திர நடிகராகவும் வலம் வரும் திலீஷ் போத்தன்.. 'ஆதார்' படத்தின் தமிழ் பதிப்பில் அருண் பாண்டியன் நடித்த அழுத்தமான ரைட்டர் வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.
'ஆதார்' திரைப்படத்தின் மலையாள ரீமேக்கில் திலீஷ் போத்தன் முக்கிய வேடத்தில் நடிப்பதால்.. இந்த திரைப்படம் மலையாள மொழியிலும் பெரிய வெற்றியை பெறும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
No comments:
Post a Comment