Featured post

Horror Is the New Humor': India’s Biggest Superstar Prabhas' First Horror-Comedy

 *Horror Is the New Humor': India’s Biggest Superstar Prabhas' First Horror-Comedy The Raja Saab Drops Thrilling Motion Poster* *Pra...

Friday 31 May 2024

பதற்றத்தை சுவைத்த ஹோம் குக்ஸ்:

 பதற்றத்தை சுவைத்த ஹோம் குக்ஸ்:  மாஸ்டர் செஃப் இந்தியா தமிழ் நிகழ்ச்சியில் செஃப் கௌசிக்கின் இணையற்ற உணவுத்தயாரிப்பை மறுஉருவாக்கம் செய்யும் முனைப்பில் ஹோம் குக்ஸ்!



மாஸ்டர் செஃப் இந்தியா நிகழ்ச்சி அதன் மாபெரும் இறுதி நிகழ்வை நோக்கி மிக நெருக்கமாக நகர்ந்து வரும் நிலையில், எதிர்கொள்கின்ற சவால்கள் வெறுமனே கடுமையானதாக மட்டும் மாறவில்லை; முழு மூச்சுடன் இப்போட்டியில் பங்கேற்கும் ஹோம் குக்ஸ், திறனை வளர்த்துக் கொள்பவர்களாகவும் தங்களை மாற்றிக்கொண்டு வருகின்றனர்.  இந்த அரையிறுதிப் போட்டி வாரமானது, பரபரப்பிற்கு பஞ்சமில்லாத நிகழ்வாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.  மாஸ்டர் செஃப் இந்தியா தமிழ் நிகழ்ச்சியின் மதிப்பிற்குரிய நடுவர் செஃப் கௌசிக் சங்கர் தீர்மானித்திருக்கின்ற பிரஷர் டெஸ்ட் இந்த வாரம் நடைபெற்றதால், ஆர்வமும், பரபரப்பும் உச்சத்தை தொட்டதில் வியப்பில்லை.  

இந்த கடுமையான பிரஷர் டெஸ்ட்டில், செஃப் கௌசிக் அவர்களின் முத்திரை பதித்த சமையல் தயாரிப்பான “மேட் செஃப் ஆன் ய பிளேட்” என்பதனை அதேபோல மறுஉருவாக்கம் செய்யும் மிகக் கடுமையான சவாலை ஹோம் குக்குகள் எதிர்கொண்டனர்.  ஆனால், இதில் ஒரு திருப்பம் இருந்தது.  இதுவரை நடைபெற்ற வழக்கமான பிரஷர் டெஸ்ட்களில் போட்டியாளர்களுக்கு ஒரு ரெசிபி தரப்படும்.  ஆனால், இந்தவார நிகழ்வின்போது அவர்களது பார்வை மற்றும் சுவை உணர்வுத்திறன்களை மட்டுமே அவர்கள் முற்றிலும் சார்ந்திருக்க வேண்டியது.  அந்த உணவை எப்படி தயாரிப்பது என்ற குறிப்போ, ரெசிபியோ தரப்படவில்லை.  இதனால் தங்களது உள்ளுணர்வு மற்றும் நினைவுத்திறனை மட்டும் சார்ந்து அந்த உணவின் சுவையையும், தோற்றத்தையும், செஃப் தயாரித்ததைப்போலவே போட்டியாளர்களும் மறுஉருவாக்கம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.  

அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற சங்கீதா சுவாமிநாதன், பிரவீன் குமார், வாணி சுந்தர், பவித்ரா நளின், ஆகாஷ் முரளிதரன், சுதீர் பதிஞ்சாரா மற்றும் ஆர்த்தி ஆகிய போட்டியாளர்களின் திறன்களுக்கான மிகச்சரியான பரிசோதனையாக இந்த சவால் இருந்தது.  சமையலில் நமது உணர்திறன் உறுப்புகளது செயல்திறனின் நிபுணத்துவம் கொண்டிருக்கும் முக்கியத்துவத்தையும் மற்றும் சமையலறையில் நாம் பெறுகின்ற அனுபவத்தையும் இந்த பவர் டெஸ்ட் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியிருக்கிறது.  

இந்த பவர் டெஸ்ட் போட்டியில் சவால்களை வெற்றிகரமாக சமாளித்து, ஜெயிக்கப்போவது யார் ? சவால் தரும் அழுத்தத்தில் துவண்டு சரியப்போவது யார், இந்த பரபரப்பான போட்டித் தொடரில் இறுதி வெற்றியாளராக வெற்றிக்கனியை பறிக்கப்போகும் நபர் யார் என்பதை கண்டறியும் இறுதிப்போட்டி நிகழ்வை நோக்கி மாஸ்டர் செஃப் இந்தியா தமிழ் நிகழ்ச்சி வேகமாக பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த போட்டியாளர்களின் திறனையும், சவாலை சமாளிக்கும் ஆற்றலையும் காண தவறாமல் சோனி லைவ்  சேனலை டியூன் செய்யுங்கள். 

சோனி லைவ் சேனலில், திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் உற்சாகத்திலும், பரபரப்பிலும் நீங்களும் பங்கு பெறுங்கள்.

No comments:

Post a Comment