Featured post

SUPER STAR' S SONG TURNS INTO A TITLE!

 SUPER STAR' S SONG TURNS INTO A TITLE! The crew of "Rathamaarey" applauded by Superstar Rajinikanth! "Rathamaarey" ...

Friday 10 May 2024

விஜய் தேவரகொண்டா, ராகுல்

 *விஜய் தேவரகொண்டா, ராகுல் சங்கிரித்யன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் புதிய பான் இந்தியா படம் அறிவிக்கப்பட்டுள்ளது*



தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் அவரது புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கும் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.  இப்படத்திற்கு தற்காலிகமாக VD14 என்று பெயரிடப்பட்டுள்ளது. படம்  குறித்த அறிவிப்பு  போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


ஒரு போர்வீரரின் சிலையின் பின்னணியில் "சபிக்கப்பட்ட நிலத்தின் புராணக்கதை" என்ற தலைப்புடன் கூடிய போஸ்டர் பெரும் ஆர்வத்தை தூண்டுகிறது.  1854-78 காலகட்டத்தில் வாழ்ந்த நாயகனின் கதையை இப்படம் விவரிக்கிறது.


பான் இந்தியன் திட்டம் 19 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மையான வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உணர்ச்சிப்பூர்வமான ஒரு சினிமாவாக, பிரம்மாண்டமான பான் இந்திய படைப்பாக இப்படம் உருவாகிறது. முன்னதாக விஜய் தேவரகொண்டாவை வைத்து, டியர் காம்ரேட், குஷி போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. விஜய் தேவரகொண்டா,  மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணி ஹாட்ரிக் ஹிட்டடிக்கும் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.. சூப்பர் ஹிட்டான டாக்ஸிவாலா படத்திற்கு பிறகு விஜய் மற்றும் ராகுல் இணையும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.



படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

No comments:

Post a Comment