Featured post

Hotstar Specials Police Police to Stream from September 19 on JioHotstar

 Hotstar Specials Police Police to Stream from September 19 on JioHotstar New promo reveals launch date; introduces Shabana Shahjahan as law...

Saturday, 30 August 2025

ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக உருவாகி இருக்கும் 'போலீஸ் போலீஸ்' ஜியோஹாட்ஸ்டாரில் செப்டம்பர் 19 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது

 *ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக உருவாகி இருக்கும் 'போலீஸ் போலீஸ்' ஜியோஹாட்ஸ்டாரில் செப்டம்பர் 19 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது!*








*தற்போது வெளியாகி இருக்கும் புது புரோமோ வெளியீட்டு தேதியை அறிவிப்பதோடு, வழக்கறிஞர் லலிதாம்பிகா கதாபாத்திரத்தில்  ஷபானா ஷாஜகானையும் அறிமுகப்படுத்துகிறது!*


*சென்னை, ஆகஸ்ட் 29, 2025:* ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸாக உருவாகி இருக்கும் 'போலீஸ் போலீஸ்' வெப்தொடர் வரும் செப்டம்பர் 19 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நன்கு வரவேற்பு பெற்ற இதன் முதல் புரோமோவில் மிர்ச்சி செந்தில் (ராஜா) மற்றும் ஜெயசீலன் தங்கவேல் (முரளி) இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது இடம் பெற்றிருந்தது. தற்போது வெளியாகி இருக்கும் புதிய புரோமோவில் ஷபானா ஷாஜகான் நேர்மையான வழக்கறிஞர் லலிதாம்பிகா கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். 


கலகலப்பான இந்த புரோமோவில் லலிதாம்பிகா முரளியை திருடன் என நினைத்து விடுகிறார். முரளி பணி செய்யும் காவல் நிலையத்திற்கே அவரை அழைத்து செல்கிறார் லலிதாம்பிகா. அவர் வருத்தப்பட வேண்டும் என்பதற்கே போலியான காயத்தை தனக்கு உருவாக்கி லலிதாவை டீஸ் செய்கிறார் முரளி. இவரோடு செந்திலும் சேர்ந்து கொள்ள இந்தத் தொடர் ஆக்‌ஷன், ஹியூமர் மற்றும் ரொமான்ஸ் இருப்பதை உறுதி செய்கிறது.


இந்தத் தொடரில் நடிகர்கள் மிர்ச்சி செந்தில், சுஜிதா தனுஷ், ஜெயசீலன் தங்கவேல், ஷபானா ஷாஜகான், சத்யா, வின்செண்ட் ராய் மற்றும் பலர் நடித்துள்ளனர். 


ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸாக உருவான 'ஆஃபிஸ்' மற்றும் 'ஹார்ட்பீட் சீசன்2' ஆகிய தொடர்கள் பார்வையாளர்களை ஒவ்வொரு வாரமும் கட்டிப்போடுகிறது. இந்த வரிசையில் 'போலீஸ் போலீஸ்' செப்டம்பர் 19 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் எக்ஸ்க்ளூசிவாக ஸ்ட்ரீம் ஆகிறது. மற்ற புரோமோ மற்றும் அறிவிப்புகளுக்கு ஜியோஹாட்ஸ்டாரை சமூகவலைதளங்களில் பின் தொடருங்கள்.


*ஜியோஹாட்ஸ்டார் பற்றி:*


ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. நல்ல கதையம்சம், புதுமையான தொழில்நுட்பம் மற்றும் அர்ப்பணிப்புடன், ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment