*மார்க் ஸ்வர்ணபூமியில்,( MARG Swarnabhoomi ) ராக்ஸ்டார் அனிருத்தின் ‘ஹுக்கும்’ (Hukum) உலக சுற்றுப்பயணத்தின் பிரமாண்ட நிறைவு விழா, வரலாறு படைத்தது*
ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தரின் "ஹுக்கும்"(Hukum)உலக இசைச் சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்ட கச்சேரி, 2025 ஆகஸ்ட் 23-ஆம் தேதி, குவாத்தூர்(Kuvathur), ECR-ல் உள்ள மார்க் ஸ்வர்ணபூமியில் நடைபெற்றது. 50,000-க்கும் அதிகமான ரசிகர்கள் பங்கேற்று, சென்னை கண்ட மிகப்பெரிய, சிறப்பாக திட்டமிடப்பட்ட இசை நிகழ்வுகளில் ஒன்றாக, இந்த இசை நிகழ்ச்சி புதிய வரலாறு படைத்திருக்கிறது.
பரந்த வாகன நிறுத்துமிடம், உணவு மற்றும் குடிநீர் அரங்குகள், அனைத்து பகுதிகளிலும் கழிப்பறைகள், மருத்துவ மையங்கள், வலுவான உள்கட்டமைப்பு மற்றும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், நிகழ்ச்சி எந்த தடங்கலும், இடையூறுகளும் இல்லாமல் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. பெருமளவிலான காவல்துறை மற்றும் போக்குவரத்து பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, முழு நிகழ்ச்சியிலும் போக்குவரத்து மற்றும் ரசிகர்கள் பாதுகாப்பு மிகச்சிறப்பாக கையாளப்பட்டது.
ராக் ஸ்டார் அனிருத் மேடையை அதிர வைத்தார். ஹிட் பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக பாடி ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்தார். குறிப்பாக வானத்தில் காட்சியளித்த ட்ரோன் (drone) நிகழ்ச்சி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, நிறைவு நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக அனைவரையும் ஈர்த்தது. ரசிகர்கள் பலருக்கு இது அவரது சிறந்த கச்சேரியாக நினைவில் நிறைந்தது.
"ஹுக்கும்" Hukum உலக சுற்றுப்பயண இறுதிக்கட்ட கச்சேரி, பிராண்ட் அவதார் நிறுவனத்தால் உலகத் தரத்தில் நடத்தப்பட்டு, சென்னை நேரடி இசை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பதிந்துள்ளது.
No comments:
Post a Comment