Featured post

KJB டாக்கீஸ் தயாரிக்கும் ஹாட் ஸ்பாட் 2much படத்தினை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் (Vishnu Vishal Studios )

 **'KJB டாக்கீஸ் தயாரிக்கும்  ஹாட் ஸ்பாட் 2much படத்தினை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் (Vishnu Vishal Studios ) நிறுவனம் வழங்குவதை பெருமிதமாக...

Sunday, 24 August 2025

மெகாஸ்டார் சிரஞ்சீவி, பிளாக்பஸ்டர் இயக்குநர் பாபி கொல்லி, முன்னணி

மெகாஸ்டார் சிரஞ்சீவி, பிளாக்பஸ்டர் இயக்குநர் பாபி கொல்லி, முன்னணி தயாரிப்பு நிறுவனம் KVN Productions  இணையும் – #ChiruBobby2 படம் மெகா கான்செப்ட் போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டது!!





பிளாக்பஸ்டர் கூட்டணியான மெகாஸ்டார் சிரஞ்சீவி மற்றும் வெற்றி இயக்குநர் பாபி கொல்லியின் கூட்டணி மீது மிகப்பெரிய  எதிர்பார்ப்பு நிலவுகிறது. மெகாஸ்டாரின் பிறந்த நாளை முன்னிட்டு,  இருவரும் இணையும் இந்த மெகா-ப்ராஜெக்ட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக  ‘வால்டர் வீரய்யா’ படத்தில் விண்டேஜ் மெகாஸ்டார் அனுபவத்தை ரசிகர்களுக்குத் தந்து இந்தக்  கூட்டணி வசூல் சாதனை படைத்தது.  இந்த புதிய திரைப்படத்தினை KVN Productions தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. 



மெகாஸ்டாரை ஒரு  மாஸான கதாப்பாத்திரத்தில் காட்டும் திறன் கொண்ட இயக்குநரான பாபி, இந்த புதிய படத்துக்கு “The blade that set the bloody benchmark” என்ற டேக்லைன் உடன் ஒரு வலுவான கான்செப்ட் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.  ஒரு சுவரை கோடாரி பிளக்கும் இந்த அறிவிப்பு போஸ்டர்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


நடிகர் சிரஞ்சீவியை முன்னெப்போதும்  இல்லாத ஒரு புதுமையான கதாப்பாத்திரத்தில் காட்டவுள்ளதாக இயக்குநர்  பாபி உறுதியளித்துள்ளார். போஸ்டர் மற்றும் டேக்லைன் படி, இப்படம் தெலுங்கு சினிமாவிற்கே புதிய அளவுகோல் அமைக்கப் போகிறது.


KVN Productions, நிறுவனம் தளபதி விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’, ‘டாக்ஸிக்’, ‘பாலன்’ என இந்தியாவே எதிர்பார்க்கும் பல பிரம்மாண்ட படைப்புகளைத் தயாரித்து வருகிறது. பல பிளாக்பஸ்டர்  ஹிட் படங்களை தந்து, இந்திய சினிமாவில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அதிகம் பேசப்படும் தயாரிப்பு நிறுவனமாக மிக வேகமாக வளர்ந்து வருகிறது KVN Productions. மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் இந்த  பிரம்மாண்ட படம்  மூலம் KVN Productions நிறுவனம்  தெலுங்கு சினிமாவில் கால் பதித்து உருவாக்கும் முதல் முயற்சியாக அமைந்துள்ளது. 


படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் இறுதியில் துவங்கவிருக்கிறது. பலத்த  எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ள இப்படத்தின் மற்ற விபரங்களைத் தயாரிப்பாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.



No comments:

Post a Comment