Veeravanakkam Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம வீரவணக்கம் ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். Anil V. Nagendran இயக்கி இருக்கற இந்த படத்துல Samuthirakani, Bharath, Rithesh, Prem Kumar, Ramesh Pisharody, Surabhi Lakshmi, P.K. Medini, Adarsh, Sidhangana, Aaiswika னு நெறய பேர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட கதையை ஒரே வரில சொல்லனும்னா கேரளா ஓட் கம்யூனிஸ்ட் கட்சியை முதல் ல ஆரம்பிச்ச வி கிருஷ்ண பிள்ளை அவர்களோடைய வாழ்க்கை வரலாறு தான் இது. இவரு தமிழ்நாடு அப்புறும் கேரளா க்கும் மத்தில ஒரு நல்ல relationship அ உருவாக்குனாரு. அதோட பெண்கள் ஓட development க்கும், சமூகம் உயிர்வு க்காகவும் நெறய விஷயங்களை பண்ணிருக்காரு.
சோ வாங்க இந்த படத்தோட கதையை detailed அ பாக்கலாம். முதல் ல தமிழ்நாட்டை காமிக்கறாங்க. இங்க bharath னு ஒரு பெரிய பணக்காரர் இருக்காரு. இவரு அவரோட ஊர்ல எந்த ஒரு பிரச்சனையா இருந்தாலும் அதா எதிர்த்து நின்னு solve பண்ணுவாரு. என்னதான் பணக்காரரா இருந்தாலும் சாதி மதம் ஏழை பணக்காரன் ன்ற வித்யாசம் பாக்காம ரொம்ப casual அ பழகுவாறு. இவரு communism அ follow பண்ணுவாரு. அப்போ தான் இவரோட பக்கத்து ஊர்ல ஒரு பெரிய சாதி வன்கொடுமை நடக்குது. இதுனால அந்த ஊர் மக்களுக்கு போய் help பண்ணுறாரு. அவங்கள அநீதி க்கு எதிரா எதிர்த்து போராட கத்துக்குடுக்கரு. அப்போ தான் இவங்கள கூட்டிட்டு kerala ல இருக்கற communists அ சந்திக்க வைக்குறாரு bharath . அப்போ தான் krishna pillai , p k methini ன்ற ஆட்களோட போராட்டம் அவங்களுக்கு இழைக்கப்பட்ட aneethi னு எல்லாமே இந்த ஊர் மக்கள் தெரிஞ்சுக்குறாங்க. kerala ல communism எப்படி உருவாச்சு, அதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
1940 ல இருந்து 1946 வரையும் நடந்த முக்கியமான events அ இந்த படத்துல காமிக்கறாங்க. ஒரு பக்கம் நம்ம நாட்டை british ஆண்டாளும் இன்னொரு பக்கம் சின்ன சின்ன கிராமத்துல இருக்கற பெரிய பெரிய ஆட்கள் அதாவுது பண்ணையார் ஜமீன்தார் எல்லாம் அந்த ஊர் ல இருக்கற ஆட்களை அடிமையாக்கி பணம் குடுக்காம நெறய வேலை வாங்குவாங்க. இவங்களோட control ல நெறய ஜாதி வேறுபாடு இருந்தது. இந்த மாதிரி கொத்தடிமையா இருந்த ஆட்களை மீட்டு எடுத்து, ஒரு புரட்சி நடந்தது இதுல இருந்து பிறந்தது தான் communism. இந்த மாதிரி intense ஆனா political scenes எல்லாமே பாக்குறதுக்கு அவ்ளோ realistic அ இருந்தது.
இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance அ பாக்கும் போது krishnapillai அ samuthirakani நடிச்சிருக்காரு. இவரோட dialogue delivery , body language னு அந்த character ஆவே வாழ்ந்துருக்காரு னு தான் சொல்லணும். அடுத்தது ரொம்ப கம்பீரமா ஒரு வித்யாசமான கதாபாத்துரத்துல நடிச்சிருக்காரு barath. இவரோட performance யும் அட்டகாசமா இருந்தது. இவரோட dialogues யும் ரொம்ப powerful அ இருக்கும் முக்கியமா climax scenes ல ஆணவக்கொலை யா பத்தி பேசுற dialogues எல்லாம் செமயா இருந்தது. மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு அவங்களோட best performance அ குடுத்திருக்காங்க.
இந்த படத்துக்கு நெறய பேர் இசை அமைச்சிருக்காங்க. எம்.கே.அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரன், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் னு இவங்களோட songs and bgm ரெண்டுமே கதைக்கு ஏத்த மாதிரி அவ்ளோ super அ பொருந்தி இருந்தது. low budget ல ஒரு உண்மையான சம்பவத்தை வச்சு தரமான படத்தை குடுத்திருக்காங்க. சோ உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment