Featured post

Director Cheran and Actor Manju Warrier Unveil the First Look of Yogi Babu Starrer Sannidhanam (P.O)

 *Director Cheran and Actor Manju Warrier Unveil the First Look of Yogi Babu Starrer Sannidhanam (P.O)* The much-awaited first look of Sanni...

Saturday, 9 August 2025

காந்தாரா திரைப்படத்திலிருந்து ருக்மணி வசந்தின் ‘கனகவதி’ (Kanakavathi)

 *காந்தாரா திரைப்படத்திலிருந்து ருக்மணி வசந்தின்  ‘கனகவதி’ (Kanakavathi) கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக்கை ஹோம்பாலே பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது !!*





வரமஹாலக்ஷ்மி திருவிழாவின் இந்த புண்ணிய நாளில், ஹோம்பாலே பிலிம்ஸ்,

ருக்‌மிணி வசந்தை ‘கனகவதி’ (Kanakavathi) எனும் கதாபாத்திரமாக, காந்தாரா அத்தியாயம் 1 படத்திலிருந்து அறிமுகப்படுத்தியுள்ளது.


இப்படம் உலகம் முழுவதும் 2 அக்டோபர் 2025 அன்று வெளியாகிறது.



இந்திய கலாச்சாரத்தில் புனிதமும் பண்பாட்டு முக்கியத்துவமும் கொண்ட வரமஹாலக்ஷ்மி திருநாளில், வரவிருக்கும் மாபெரும் திரைப்படமான “காந்தாரா அத்தியாயம் 1”  இன் நாயகியாக நடிக்கும் நடிகை ருக்‌மிணி வசந்தின் ‘கனகவதி’ (Kanakavathi) கதாப்பாத்திர ஃபர்ஸ்ட்  லுக் போஸ்டரை, ஹோம்பாலே பிலிம்ஸ் பெருமையுடன் வெளியிட்டுள்ளது.


இப்படத்தை எழுதி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ரிஷப் ஷெட்டி. நம் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கதைக்களத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி, மக்களிடமும்  விமர்சகர்களிடமும் பெரும்  பாராட்டுக்களைக் குவித்த “காந்தாரா” படத்தின் முன்கதையைச் சொல்லும் (Prequel) படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.


இவ்வருடத்தின் தொடக்கத்தில், நாயகன் ரிஷப் ஷெட்டியின் கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக், அவரது பிறந்தநாளன்று வெளியிடப்பட்டு, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து, படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டதை அறிவித்த “Wrap -Up” வீடியோ, படத்தின் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தி, படத்தின் மீது பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்போது, கனகவதி கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியீடு, ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


காந்தாரா அத்தியாயம் 1 படத்தின் கதை, இந்திய பாராம்பரியத்தின் வேர்களைப் பற்றிய  ஆழமான கதையைச் சொல்வதோடு, விஷுவலாக வேறொரு உலகத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். ஒளிப்பதிவாளர் அர்விந்த் S . காஷ்யப் (Arvind S. Kashyap’s)உடைய கண்கவர் ஒளிப்பதிவும், B. அஜநீஷ் லோக்நாத் (Ajaneesh

Loknath) வழங்கியுள்ள ஆன்மாவை வருடும் இசையும், ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில்  விஜய் கிரகந்தூரின் ( Vijay Kiragandur) பிரம்மாண்ட தயாரிப்பும், இப்படத்தை இதுவரை இல்லாத பேரனுபவமாக உருவாகியுள்ளது.


“காந்தாரா அத்தியாயம் 1” உலகம் முழுவதும் 2 அக்டோபர் 2025 அன்று, கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், பெங்காலி மற்றும் ஆங்கிலம் மொழிகளில்  வெளியாகிறது.


இன்றைய தினம் நாடு முழுவதும் மகாலட்சுமி தேவியின் அருளைப் பெறும் நேரத்தில்,

உலகம் முழுவதும் பார்வையாளர்களின் மனங்களில் அழியாத இடத்தைப் பெறவிருக்கும் கனகவதி பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஹோம்பாலே பிலிம்ஸ் பெருமையுடன் வழங்குகிறது.

No comments:

Post a Comment