Featured post

Rajkumar Theatres Pvt. Ltd. secures interim injunction from Madras High Court in 'Drishyam 3' Telugu rights Dispute

 *Rajkumar Theatres Pvt. Ltd. secures interim injunction from Madras High Court in 'Drishyam 3' Telugu rights Dispute* *Madras High ...

Friday, 22 August 2025

சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை, நரம்பியல் மற்றும் மூளை & முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்கான

 சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை, நரம்பியல் மற்றும் மூளை & முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்கான பிரத்தியேக சிகிச்சையங்களைத் தொடங்குகிறது








-     நோயாளிகளை மையப்படுத்திய நரம்பியல் பராமரிப்பில் ஒரு புதிய சகாப்தத்திற்கான முன்னோடி முயற்சி


சென்னை, ஆகஸ்ட் 21, 2025 – நரம்பியல் அறிவியலில் சிறந்து விளங்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை, நரம்பியல் மற்றும் மூளை & முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்காகச் சிறப்பு சிகிச்சையகங்கள் (Clinics) தொடங்கப்படுவதைப் பெருமையுடன் அறிவிக்கிறது. மேலும் பக்கவாதம் தொடர்பான சிகிச்சைகளில், செயற்கை நுண்ணறிவு (AI) முறையை அறிமுகப்படுத்துதலும் இதில் அடங்கும். இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி, நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிலைமைகளின் நோயறிதல், சிகிச்சை மற்றும் விரிவான மருத்துவ மேற்பார்வையை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மருத்துவமனையின் புத்தாக்கம், நிபுணத்துவம் மற்றும் நோயாளியை மையப்படுத்திய பராமரிப்புக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.


நரம்பியல் பராமரிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் அணுகுமுறை


உலகளாவிய அளவில் நரம்பியல் மற்றும் முதுகெலும்பு கோளாறுகள் அதிகரித்து வரும் நிலையில், மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் மருத்துவ நிபுணத்துவத்தை இணைக்கும் ஒருங்கிணைந்த மருத்துவப் பராமரிப்புக்கான தேவை அதிகரித்துள்ளது. இவற்றை மனதில் கொண்டு, காவேரி மூளை மற்றும் முதுகெலும்பு பிரிவு (KIBS - Kauvery Institute of Brain and Spine) உருவாக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில், முன்னணி நரம்பியல் நிபுணர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சையாளர்கள், நரம்பியல் கதிரியக்க நிபுணர்கள், நரம்பியல் உளவியலாளர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள், உடலியக்கச்சிகிச்சையாளர்கள், செவிலியர்கள், இயல்புமீட்பு நிபுணர்கள் என திறமையான மருத்துவக் குழு உள்ளனர். இந்தக் குழு கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவரான மருத்துவர் கிரிஷ் ஸ்ரீதரின் தலைமையில், ஒருங்கிணைந்த கூட்டுறவு முயற்சியின் மூலமாக பராமரிப்புக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு தடையற்ற ஒருங்கிணைந்த மாதிரி அமைப்பில் இணைந்துள்ளனர்.

பக்கவாத சிகிச்சையில் செயற்கை நுண்ணறிவு (AI) – ஆரம்ப நிலையிலேயே நோயறிதலில் ஒரு திருப்புமுனை


உலக பக்கவாதம் அமைப்பின் கூற்றுப்படி, 2050 ஆம் ஆண்டுக்குள், உலகளாவிய பக்கவாத பாதிப்பு, 87% குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுடைய நாடுகளில் (LMICs) இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது உலகளவில் இறப்புக்கு இரண்டாவது முக்கிய காரணமாக பக்கவாதம் விளங்குகிறது. மேலும் 25 வயதுக்கு மேற்பட்ட 4 பேரில் ஒருவர், தங்கள் வாழ்நாளில் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த தசாப்தத்தில் பக்கவாத சிகிச்சையில் மிகச் சிறப்பான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் நரம்பு வழியாக செலுத்தப்படும் "உறைவு நீக்க (Clot Buster)" மருந்துகள் மற்றும் மெக்கானிக்கல் த்ரோம்பெக்டமி (Mechanical Thrombectomy) ஆகியவை அடங்கும். இச்சிகிச்சைகளின் மூலமாக, பக்கவாதத்திற்கு ஆரம்பநிலையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டால் பக்கவாத சேதத்தில் இருந்து மீட்டுப் பழைய நிலைக்கு நோயாளிகளைக் கொண்டு வர இயலும். இதன் அடிப்படையில், ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை, பல மருத்துவப் பிரிவுகளைச் செயற்கை நுண்ணறிவின் (AI) உதவியுடன் ஒருங்கிணைக்கும் அணுகுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. திருப்புமுனையை ஏற்படுத்தும் இத்தகைய மருத்துவ அணுகுமுறை, நரம்பியல் துறையில் முதல் முறையாக நிகழ்த்தப்பட்டிருக்கும் முன்னோடி முயற்சியாகும்.


செயற்கை நுண்ணறிவின் திறன்களைப் பயன்படுத்துவதன் மூலம், மருத்துவர்களால் தற்போது விரைவான, மிகவும் துல்லியமான முடிவுகளை எடுக்க முடியும். மேலும் முன்கூட்டிய நோயறிதலின் மூலம் நோயாளியைப் பாதிப்பில் இருந்து மீட்டு அவரது உடல்நலனை மேம்படுத்த முடியும். செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் பொன்னான அவசர நேரத்திற்குள் மேற்கொள்ளப்படும் பக்கவாத சிகிச்சை,  ஆரம்பகால உயிர்காக்கும் தலையீடுகளை ஆறு மடங்கு வரை அதிகரிக்கவும், சிகிச்சை நேரத்தை 25% க்கும் அதிகமாகக் குறைக்கவும் முடியும் என்று ஆய்வுகள் சுட்டுகின்றன. இதனால் நோயாளிகள், ஊனம் இல்லாமல் குணமடைவதற்கான அதிக வாய்ப்பு கிடைக்கிறது.


சிறப்புச் சிகிச்சையகங்களின் நோக்கம்


புதிதாகத் தொடங்கப்பட்ட சிகிச்சையகங்கள் பின்வரும் பகுதிகளில் கவனம் செலுத்தி நிபுணத்துவத்தை வழங்கும்:


கால்-கை வலிப்பு மற்றும் வலிப்புத்தாக்கக் கோளாறுகள்

பார்கின்சன்’ஸ் நோய் மற்றும் இயக்கக் கோளாறுகள்

தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி 

அசாதாரண முக வலி 

முதுகெலும்பு குறைபாடுகள் 



இந்தச் சிகிச்சையகங்களின் தனிச்சிறப்பு என்னவென்றால், பல-நிபுணர் ஆலோசனை அணுகுமறையாகும். நோயாளிகளின் நிலை, நிபுணர்கள் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டுக் கூட்டாக விவாதித்து, ஒரு பராமரிப்பு திட்டத்தை இறுதி செய்து, துல்லியமான, முழுமையான தனிப்பட்ட சிகிச்சையை உறுதி செய்கிறார்கள்.


இந்த மருத்துவமனையில் மேம்பட்ட MRI மற்றும் CT இமேஜிங், டிஜிட்டல் வீடியோ EEG கண்காணிப்பு, அறுவை சிகிச்சையில் நரம்பு வழிசெலுத்தல் மற்றும் குறைந்தபட்ச ஊடுருவும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட அதிநவீன நோயறிதல் மற்றும் சிகிச்சை கருவிகள் உள்ளன.


ஒருங்கிணைந்த நரம்பியல் பராமரிப்பு - ஒரு கூட்டு அமைப்பு 


இந்த சிறப்பு மருத்துவமனைகளின் அடிப்படை, "ஒருங்கிணைந்த நரம்பியல் பராமரிப்பு" ஆகும். இது, பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்களின் கூட்டாக ஒவ்வொரு பிரச்சனையையும் மதிப்பீடு செய்து, சிகிச்சை அளித்துக் கண்காணிக்கும் ஒரு முன்னோடி அணுகுமுறையாகும். ஆரம்ப ஆலோசனையிலிருந்து இயல்புமீட்பு வரை, நரம்பியல் நோயின் மருத்துவ மற்றும் உளவியல் பரிமாணங்களை நிவர்த்தி செய்யும் நெறிப்படுத்தப்பட்ட, குழு அடிப்படையிலான பராமரிப்பிலிருந்து நோயாளிகள் பயனடைகிறார்கள்.


மருத்துவ சிறப்பும், தொழில்நுட்பத் தலைமைத்துவமும்


ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை,  அதிநவீன நடைமுறைகளில் திறமையான நரம்பியல் நிபுணர்களையும், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களையும் கொண்ட ஒரு புகழ்பெற்ற குழுவால் பணியாற்றப்படுகிறது. 


எண்டோஸ்கோபிக் மூளை அறுவை சிகிச்சை

முதுகெலும்பு அறுவை சிகிச்சையில் குறைந்தபட்ச ஊடுருவல் 

இயக்கக் கோளாறுகளுக்கு ஆழ்ந்த மூளைத் தூண்டுதல் (DBS) 

மருந்துகளை மீறிய வலிப்பு நோய்க்கான மேம்பட்ட சிகிச்சைகள் 


இந்த மேம்பட்ட சிகிச்சைகள், உலகளவில் கிடைக்கக்கூடிய மிகவும் பயனுள்ள மற்றும் குறைந்த ஊடுருவும் தீர்வுகளை அணுகுவதை நோயாளிகளுக்கு உறுதி செய்கின்றன.


ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் கல்வி


மருத்துவ  மேன்மைக்கு அப்பால், ஆராய்ச்சி, மருத்துவ பரிசோதனைகள் மற்றும் கல்விசார் கூட்டாண்மை மூலம் நரம்பியல் அறிவியலின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் KIBS உறுதிபூண்டுள்ளது. சிறப்புச் சிகிச்சையகங்கள், மருத்துவ பயிற்சிகளுக்கும், ஆய்வினை நடைமுறைக்கு மாற்றும் முயற்சிகளுக்கும், நரம்பியல் பராமரிப்பில் சமீபத்திய உலகளாவிய கண்டுபிடிப்புகளை நோயாளிகள் அணுகுவதற்கும் உதவும்.


தலைமைத்துவ செய்தி


"நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை தேவைகளைக் கொண்ட நோயாளிகளுக்குச் சிறந்த சிகிச்சையை வழங்குவதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளில், இந்த சிறப்புச் சிகிச்சையகங்களைத் தொடங்குவது ஒரு மைல்கல் ஆகும். இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிகிச்சையகங்களின் ஒருங்கிணைந்த மருத்துவ அணுகுமுறையால், சமூகத்தில் பொதுவான பிரச்சனைகளாக இருக்கும் ஆனால் சில நேரங்களில் நோயறிதலுக்கும் பராமரிப்புக்கும் சவாலானதாக அமையும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பலனடையவார்கள். மேலும் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ற தீர்வுகளை அவர்களுக்கு வழங்க முடியும்" என்று காவேரி மூளை மற்றும் முதுகெலும்பு பிரிவின் குழு வழிகாட்டியும், இயக்குநருமான மருத்துவர் K. ஸ்ரீதர் கூறினார். மேலும், "தொழில்நுட்ப சிறப்பு, கனிவான பராமரிப்பு மற்றும் கூட்டு நிபுணத்துவம் ஆகியவற்றை இணைத்து, ஒவ்வொரு நோயாளியும் அவர்களின் தனித்துவமான சூழ்நிலைகளுக்கு ஏற்ப சிகிச்சை பெறுவதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம்” என்றார்.

வழங்கப்படும் விரிவான சேவைகள் 


ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையின் KIBS, முழு அளவிலான நரம்பியல் சேவைகளை வழங்குகிறது.

 

பிரத்தியேக நரம்பியல் நோயறிதல் ஆய்வகங்கள்

24/7 கடுமையான பக்கவாதம் மற்றும் நரம்பியல் சேவைகள் 

நரம்பியல் இயல்புமீட்பு மற்றும் உடலியக்க மருத்துவம்

பேச்சு மற்றும் மொழி தேறுவழி (Therapy)

நரம்பியல் உளவியல் மற்றும் ஆலோசனை

நோயாளிக்குக் கல்விப்பயிற்சி அளித்தல் மற்றும் ஆதரவு குழுக்கள்


ரேடியல் சாலை காவேரி மருத்துவமனை பற்றி


சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை, ஒரு முன்னணி சுகாதார நிறுவனமாகும். நரம்பியல், இருதயவியல், இரைப்பை குடல், பெண்கள் மற்றும் குழந்தை நலம், எலும்பியல், மூட்டு புணரமைப்பு, சிறுநீரகம், சிறுநீரகம் முதலிய சிறப்புப் பிரிவுகளில், மேம்பட்ட மருத்துவமும், அறுவை சிகிச்சை வசதியும் வழங்குகின்றது. பிரத்தியேக நிபுணர்கள் குழு, 250+ படுக்கைகள் வசதியில் 50+ கிரிட்டிக்கல் கேர் படுக்கைகள், 20+ NICU படுக்கைகள், 7+ ஆபரேஷன் தியேட்டர்கள், ஒரு மேம்பட்ட கேத் லேப், 3T MRI மற்றும் 4K + 3D நரம்பியல் நுண்ணோக்கி, உறுப்பு மாற்று சிகிச்சை வசதிகள், 24/7 டயாலிசிஸ் பிரிவு போன்ற அதி நவீன வசதிகளின் மூலம் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை, உலகம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு வழங்குகின்றது.

No comments:

Post a Comment