Featured post

Kadukka Movie Review

 Kadukka Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kadukka  ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். S.S.Murugarasu தான் இந்த படத்தை இயக்கி இர...

Thursday, 28 August 2025

குற்றம் புதிது' படம் மூலம் ரசிகர்களின் மனம் கவர வருகிறார் நடிகர் தருண் விஜய்

 *'குற்றம் புதிது' படம் மூலம் ரசிகர்களின் மனம் கவர வருகிறார் நடிகர் தருண் விஜய்!*






ஸ்டைல், அர்ப்பணிப்பு மற்றும் திறமையுள்ளவர்களை தமிழ் சினிமா எப்போதும் வரவேற்கும்! அந்த வகையில், நாளை வெளியாக இருக்கும் 'குற்றம் புதிது' படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார் நடிகர் தருண் விஜய். லெஜெண்ட் நடிகர்கள் புரூஸ் லீ, ஜாக்கி சான் மற்றும் டோனி ஜா போன்ற முகத்தோற்றம் தருண் விஜய்க்கு இருப்பதாக படத்தின் முதல் பார்வை போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடினர். SRM கல்லூரி மாணவர்கள் மத்தியில் தருண் புகழ்பெற்றவராக இருப்பதால் நாளை (ஆகஸ்ட் 29, 2025) வெளியாக இருக்கும் அவரின் 'குற்றம் புதிது' பட போஸ்டரை மாணவர்கள் ஷேர் செய்து வருகின்றனர். 


திருவள்ளூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரின் மகனான தருண் விஜய் சென்னை போன்ற இந்த பெரும் நகரத்தில் மற்றவர்களைப் போலவே சாதாரண மேன்ஷனில் தங்கி தனது கனவை நிறைவேற்றியுள்ளார். 'குற்றம் புதிது' படத்திற்காக கொரில்லா உடல்மொழியை மூன்று மாதங்கள் கற்று தேர்ந்திருக்கிறார் தருண் விஜய். அவரது அர்ப்பணிப்பை பார்த்த பலரும் சிறந்த அறிமுக நடிகருக்கான விருது பெற தகுதியானவர் தருண் எனப் பாராட்டி வருகின்றனர்.


நடிகர் தருண் விஜய் பகிர்ந்து கொண்டதாவது, "சிறுவயதில் இருந்தே எனக்கு தமிழ் சினிமா மிகவும் பிடிக்கும். படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் கனவாக இருந்தது. கமல்ஹாசன் சாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதே என் மிகப்பெரிய கனவு. 'குற்றம் புதிது' படத்தில் என் நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்த ஆதரவு கொடுத்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி. ரசிகர்களுக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன்" என்றார். 


'குற்றம் புதிது' மூலம் அறிமுகமாகும் தருண் விஜய் நிச்சயம் அவரது குடும்பத்தினரையும் பார்வையாளர்களையும் தமிழ் சினிமாவையும் பெருமைப்படுத்துவார். 


'குற்றம் புதிது' படத்தில் தருண் விஜயின் தனித்துவமான திறமை, தீவிரமான திரையிருப்பு போன்றவை நிச்சயம் அவரை தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த உயரத்திற்கு எடுத்து செல்லும்.

No comments:

Post a Comment