3வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி 2025 - மஹிபால் சிங் சாம்பியன் பட்டம் வென்றார்
சென்னையில் நடைபெற்று வந்த 3 வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி 2025-ன் இறுதிப் போட்டியில் தீபக் கோத்தாரியை வீழ்த்தி மஹிபால் சிங் சாம்பியன் பட்டம் வென்றார்.
3 வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி 2025, சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ் பவுல் டென்பின் பவுலிங் விளையாட்டு மையத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டி நேற்று (ஆக்ஸ்ட் 6) நடைபெற்றது. இதில், மஹிபால் சிங் - தீபக் கோத்தாரி மோதினார்கள்.
மூன்று ஆட்டங்களில் சிறந்ததை அடிப்படையாகக் கொண்டு விளையாடிய இறுதிப் போட்டியின், முதல் சுற்றை மஹிபால் சிங் (212-192) என்ற பின்கள் அடிப்படையில் கைப்பற்றினார். இரண்டாவது சுற்றில் சுதாரித்துக் கொண்ட தீபக் கோத்தாரி, சிறப்பாக விளையாடி மஹிபால் சிங்கை (214-172) என்ற பின்கள் கணக்கில் வீழ்த்தினார். வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது சுற்றில், மஹிபால் சிங் 83 பின்கள் (244-161) வித்தியாசத்தில் தீபக் கோத்தாரியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
முன்னதாக, மூன்று ஆட்டங்களில் சிறந்த ஆட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட முதல் அரையிறுதியில், தீபக் அபிஷேக் டி-யை 2-0 (221-201, 208-177) என்ற கணக்கில் வீழ்த்தினார். இரண்டாவது அரையிறுதியில், மஹிபால் சோபன் டி-யை 2-0 (207-178 & 248-236) என்ற கணக்கில் வீழ்த்தினார்.
2வது சுற்றுக்குப் பிறகு கணேஷ் என்.டி. 206.50 என்ற சராசரியுடன் 2478 பின்ஃபாலுடன் அட்டவணையில் முதலிடத்தைப் பிடித்தார், அதைத் தொடர்ந்து சோபன் டி (பின்ஃபால் - 2425, சராசரி - 202.08) இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
சிறப்பு பரிசுகள்:
6 ஆட்டங்களில் அதிகபட்ச சராசரி தொகுதி : கணேஷ் என்.டி. (பின்ஃபால் - 1299, சராசரி - 216.50)
ஒரு ஆட்டத்தில் அதிகபட்ச ஸ்கோர் : சோபன் டி (258)
No comments:
Post a Comment