Featured post

Megastar Chiranjeevi’s Emotional Message On Mana Shankara Vara Prasad Garu

 Megastar Chiranjeevi’s Emotional Message On Mana Shankara Vara Prasad Garu Blockbuster Success Megastar Chiranjeevi once again proved why h...

Tuesday, 7 October 2025

ஜியோஹாட்ஸ்டாரில் அக்டோபர் 10 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகும் 'மிராய்

 *ஜியோஹாட்ஸ்டாரில் அக்டோபர் 10 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகும் 'மிராய்!*
















ஃபேண்டஸி- ஆக்‌ஷன் கதையாக உருவாகியுள்ள 'மிராய்' அக்டோபர் 10 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது. எமோஷன், புராணம் மற்றும் ஆக்‌ஷன் ஆகியவற்றுடன் இதுவரை பார்த்திராத பிரம்மாண்ட காட்சிகளுடன் படம் இருக்கும். 


விதியும் தெய்வீகமும் மோதும் உலகில் அமைக்கப்பட்டுள்ள 'மிராய்', மனிதகுலத்திற்கு சமநிலையையும் நம்பிக்கையையும் மீட்டெடுக்க அனைத்து தடைகளையும் எதிர்த்து நிற்க வேண்டிய தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு போர்வீரனின் கதையைச் சொல்கிறது. அற்புதமான காட்சியமைப்புகள், திறமையான நடிகர்கள் மற்றும் ஆழமான கதையுடன், ஜியோஹாட்ஸ்டாரில் இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-சவுத் டிஜிட்டல் வெளியீடுகளில் ஒன்றாக 'மிராய்' இருக்கும். 


இந்தப் படத்தில் தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ரித்திகா நாயக், ஜகபதி பாபு, ஜெயராம் மற்றும் ஷ்ரியா சரண் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், நடிகர் ராணா டகுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்க, நடிகர் பிரபாஸ் சிறப்பு குரல் கொடுத்துள்ளார். கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு,  கவுரா ஹரி இசையமைத்திருக்க, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்திருக்கிறார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி பேனரின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரித்துள்ளனர். 


படத்தின் சவுண்ட் டிராக், பிரம்மிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் தீவிரமான கதை ஆகியவற்றிற்காக டிரெண்டான இந்தக் கதை அதன் கிளிம்ப்ஸ் மற்றும் டிரெய்லர் காட்சிகளுக்காக சமூகவலைதளத்தில் அதிகம் பேசப்பட்டது.


ஜியோஹாட்ஸ்டாரில் அக்டோபர் 10 ஆம் தேதி டிஜிட்டல் பிரீமியர் ஆகும்  'மிராய்' பார்வையாளர்களுக்கு தைரியம், விதி மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் இன்னொரு வடிவத்தைக் காட்ட இருக்கிறது.

No comments:

Post a Comment