*ஐஐடி பாம்பே டெக்ஃபெஸ்ட் நிகழ்வில் ‘டிரான்:ஏரஸ்’ திரைப்படத்தை வியந்த வருங்கால தொழில்நுட்ப வல்லுநர்கள்!*
செயற்கை தொழில்நுட்பம் வெறும் கருவியாக மட்டும் இல்லாமல் அதற்கும் மேற்பட்டதாக எப்படி இனி மாற இருக்கிறது என்பதை ’டிரான்: ஏரஸ்’ திரைப்படம் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது. தொழில்நுட்பம் என்பது நமக்கு அறிமுகம் இல்லாதவரை நமக்கு அது எந்த பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை என்பதை இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த இருக்கும் ஐஐடி மாணவர்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர். டிஸ்னியின் ’டிரான்: ஏரஸ்’ திரைப்படம் ஐஐடி பாம்பே மாணவர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்துள்ளது.
படத்திலிருந்து உத்வேகம் பெற்று, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஐஐடி மாணவர்கள் மேம்பட்ட தொழில்நுட்பம், கற்பனை மற்றும் கேமிங் கலாச்சாரத்தைக் கொண்டாடும் நிகழ்வை உருவாக்கினர். அற்புதமான ஹை எனர்ஜி LED நடன நிகழ்ச்சியும் அங்கு நடந்த லேசர் நிகழ்ச்சியும் கண்ணைக் கவரும் விதமாக அமைந்தது. ஆனால், தொழில்நுட்பம் ஆட்சி செய்யும் உலகமான ’டிரான்: ஏரஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் தான் மாணவர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது. முன்னாள் ஐஐடி மாணவர்கள் மற்றும் முன்னோடி தொழில்முனைவோர் அஷ்னீர் குரோவருடன் இணைந்து செயற்கை தொழில்நுட்பத்தின் நன்மை, தீமை குறித்து உற்சாகமாக கலந்துரையாடினார்கள்.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நிறைந்த அரங்கில் சினிமா, செயற்கை தொழில்நுட்பம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் பற்றிய தீவிர உரையாடல் அங்கு நிகழ்ந்தது. டிரானின் தொலைநோக்கு பார்வை கொண்ட உலகம் தற்போதைய தொழில்நுட்பம் மற்றும் எதிர்கால வளர்ச்சி பற்றிய சாத்தியக்கூறுகளையும் ஆராய்கிறது.
இதுகுறித்து ஐஐடி பாம்பே டெக்ஃபெஸ்ட் நிகழ்வின் மேலாளர் மயங் முட்கல் பகிர்ந்து கொண்டதாவது, "ஐஐடி பாம்பேயின் டெக்ஃபெஸ்டில் உள்ள நாங்கள் டிரான்: ஏரெஸுடன் இணைவதில் உற்சாகமாக இருக்கிறோம். டிரான் யுனிவர்ஸ் எப்போதும் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் படைப்பாளர்களை தைரியமான, எதிர்கால உலகங்களை கற்பனை செய்ய ஊக்குவித்துள்ளது. இந்த பார்ட்னர்ஷிப் மூலம், புதிய கண்டுபிடிப்புகளை கொண்டுவர படைப்பாற்றல் உணர்வை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கிறோம்" என்றார்.
ஹாலிவுட் அறிவியல் புனைக்கதையான இந்தத் திரைப்படம் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற தொழில்நுட்ப விழாவை சந்திக்கும் தனித்துவமான தருணத்தைக் குறிக்கிறது. இங்கு கதைசொல்லல், புதுமை மற்றும் ஆழமான அனுபவங்கள் அதிகம் பகிரப்பட்டது. இந்த வாரம் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் பார்வையாளர்கள் ’டிரான்: ஏரஸ்’ திரைப்படத்தைப் பார்த்து மகிழலாம்.
ஜாரெட் லெட்டோ, கிரேட்டா லீ, இவான் பீட்டர்ஸ், ஹசன் மின்ஹாஜ், ஜோடி டர்னர்-ஸ்மித் மற்றும் ஜெஃப் பிரிட்ஜஸ் ஆகியோர் நடித்துள்ள ’டிரான்:ஏரஸ்’ திரைப்படம் அக்டோபர் 10, 2025 அன்று இந்திய திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
No comments:
Post a Comment