Featured post

ஒரு சட்ட கல்லூரி மாணவியின் சமூகதீர்க்கான போராட்டம் தான் " ஈகை "

 ஒரு சட்ட கல்லூரி மாணவியின் சமூகதீர்க்கான போராட்டம் தான் " ஈகை "  இப்படத்தின் இயக்குனர்  அசோக் வேலாயுதம் எனும் நான்  இதற்க்கு முன்...

Friday, 10 October 2025

ஒரு சட்ட கல்லூரி மாணவியின் சமூகதீர்க்கான போராட்டம் தான் " ஈகை "

 ஒரு சட்ட கல்லூரி மாணவியின் சமூகதீர்க்கான போராட்டம் தான் " ஈகை " 

இப்படத்தின் இயக்குனர்  அசோக் வேலாயுதம் எனும் நான்  இதற்க்கு முன் வெவ்வேறு மொழி சார்ந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளேன்  


மும்பை , ஹைதராபாத் , சென்னை போன்ற பல்வேறு இடங்களில் 33 நாட்கள் படப்பிடிப்பு முடிந்த நிலையில் , இறுதி கட்ட படப்பிடிப்பு இப்பொழுது துவங்கி கொண்டு இருக்கிறோம் . 


இந்த இறுதி கட்ட படப்பிடிப்பில் பிளாஷ் பேக் மற்றும் கிளைமாக்ஸ் - ஐ இயக்கியதுடன் படப்பிடிப்பு முழுமை அடைந்துவிடும் . 


இப்படத்தில் மார்க் எனும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் " ரோஷன் கனகராஜ் " என்பவரை அறிமுகம் படுத்துகிறேன் , இந்த மார்க் எனும் கதாபத்திரம் - புஷ்பா பட வில்லன் சுனிலுடன் சார்ந்த கதையில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாய் திருப்புமுனையாய், இருக்கும்.


இத்துடன் சேர்ந்து அருவி பாலா--ரூபினி மற்றும் 25 புதிய முகங்களை ஒரு முக்கிய கதாபத்திரத்தில் அறிமுகம் படுத்துகிறேன் .


 இப் படம் ஒரு பெண்னை மையப்படுத்திய படம் .கதையின்நாயகி அஞ்சலி - யுடன் சேர்ந்து " சந்தோஷ் பிரதாப் - சுனில் - அர்ஜய் - பொன்வன்னன் - ஹரிஷ் பேரடி - அபிராமி - தீபா - புகழ் " போன்ற முன்னணி நடிகர்களும் நடித்து கொண்டு வருகிறார்கள் .


 இப்படத்தின் ஒளிபதிவாளர் ஸ்ரீதர் , இதற்க்கு முன் மயக்கம் என்ன - பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் ஒளிபதிவாளராக செய்துள்ளார் . 


மற்றும் விடாமுயற்சி - சரோஜா - ஆரண்யா காண்டம் போன்றது படங்களில் வேலை செய்து தேசிய விருதுவாங்கிய N . B . ஸ்ரீகாந்த்  தான் இப்படத்தின் எடிட்டர் . 


மற்றும் காலா - கபாலி - சார்பாட்ட பரம்பரை - கேப்டன் மில்லர் - போன்ற படங்களின் ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் இப்படத்தில் பணியாற்றியுள்ளார் .



வசனம் எழுதியவர் டைரக்டர் . பரதன்.      தில் - தூள் - கில்லி - வீரம் போன்ற படங்களில் வசனம் எழுதியவர் . 


இசை தரன் குமார் - ஸ்டண்ட் மாஸ்டர் சிறுத்தை கணேஷ் - பாடல்வரிகள்,கார்த்திக்


தயாரிப்பு கிருஷ்ணமச்சாரிய ராமபத்திரன், பிருந்தா கிருஷ்ணா க்ரியேஷன்ஸ்                        


சமுக நீதி - அரசியல் பகுத்தறிவு -  பொருளாதாரம் இது மூன்றும்தான் ஒரு மனிதனை மேன்மைபடுத்தூம், அதை மைய்யப்படுத்தி உருவாகி கொண்டு இருக்கும் ஒரு படம் தான் ஈகை .

No comments:

Post a Comment