Featured post

God Of Masses Nandamuri Balakrishna, Blockbuster Maker Boyapati Sreenu, Raam Achanta, Gopi Achanta, 14 Reels Plus,

 God Of Masses Nandamuri Balakrishna, Blockbuster Maker Boyapati Sreenu, Raam Achanta, Gopi Achanta, 14 Reels Plus, M Tejaswini Nandamuri Pr...

Thursday, 2 October 2025

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சுந்தர் C இயக்கத்தில்,

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில்,  சுந்தர்  C  இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில்,  "மூக்குத்தி அம்மன் 2"  ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! 

மூக்குத்தி அம்மன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து,  வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில், டாக்டர் ஐஷரி K கணேஷ் தயாரிப்பில்,  வெற்றி இயக்குநர் சுந்தர் C  இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் “மூக்குத்தி அம்மன் 2”, படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 


முதல் பாகமான மூக்குத்தி அம்மன் பக்தி, காமெடி, சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் குடும்ப ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. தற்போது அதே கதைக்களத்தில் இன்னும் பிரம்மாண்டமான அனுபவம் தரும் வகையில், கமர்சியல் படங்களில் தனித்துவமான திறமை பெற்ற இயக்குநர் சுந்தர் C இயக்கத்தில், நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்க, மூக்குத்தி அம்மன் 2 பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. 


இப்படத்தில் நயன்தாராவுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்ட படைப்பாக, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஐஷரி கே. கணேஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார். 


வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஐஷரி K கணேஷ் கூறியதாவது..,

மூக்குத்தி அம்மன் ஒரு படம் மட்டும் அல்ல, மக்களை உணர்வுரீதியாக கவர்ந்த படைப்பு. பக்தி, மர்மம், நகைச்சுவை என அனைத்தையும் கலந்து, ஒரு பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தைத் தர வேண்டுமென்பதே எங்கள் குறிக்கோள். எங்கள் பிரம்மாண்ட உருவாக்கத்தின் ஒரு சிறு துளி தான் இந்த ஃபர்ஸ்ட் லுக். 


தெய்வீகமும் மாயமும் நிறைந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. வரும் கோடை கால விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment