*ஜியோ ஹாட்ஸ்டார் சவுத் அன்பாண்ட் நிகழ்வில் திரு.கமல் ஹாசன் அவர்கள் பேசியது..*
இந்த மேடையை நமது தமிழக துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் திரு எம். பி. சாமிநாதன் ஆகியோருடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். அத்துடன் ஜியோ ஸ்டாரின் பொழுதுபோக்கு பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு கெவின் வாஸ், ஜியோ ஸ்டாரின் பொழுதுபோக்கு பிரிவின் (தெற்கு) தலைவர் திரு. கிருஷ்ணன் குட்டி, ஜியோ ஸ்டாரின் மார்க்கெட்டிங் மற்றும் SVOD தலைவர் திரு சுஷாந்த் ஸ்ரீ ராம் , ஜியோ ஸ்டார் தமிழ் - நிர்வாக துணைத்தலைவர் திரு ஆர். பாலச்சந்திரன் மற்றும் தொழில்துறையின் புகழ்பெற்ற உறுப்பினர்களுக்கும், என்னுடைய நண்பர்களான மோகன்லால் - நாகார்ஜுனா - விஜய் சேதுபதி - ஆகியோருக்கும் எனது வணக்கங்கள்.
இந்தியாவின் ஊடக மற்றும் பொழுதுபோக்கு துறை சாதாரணமாக வளர்ச்சி அடையவில்லை. அது மாற்றத்தை கண்டு கொண்டிருக்கும் ஒரு முக்கியமான தருணத்தில் நாம் இங்கு ஒன்று கூடி இருக்கிறோம். முதல்முறையாக இந்த மாற்றம் ஒரு சாதனத்தினாலோ அல்லது வடிவமைப்பினாலோ ஏற்பட்டதல்ல. மாறாக இந்த மாற்றம் பார்வையாளர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இன்று, கதைகள்- உண்மையிலேயே திரை -அஞ்ஞானவாதமாக திகழ்கிறது. அவை பார்வையாளர்களுடன் பயணிக்கின்றன. அதனால் பார்வையாளர்களே தளமாகிவிட்டனர். இது நிகழும் போது ஊடகத்திற்கும், செய்திக்கும் இடையிலான உறவு என்றென்றும் மாற்றம் பெறுகிறது. கதைகள் என்பது எந்த திரைக்கும் சொந்தமானவை அல்ல. அவை எப்போதும் கேட்பவருடன் பயணிக்கின்றன. அத்துடன் அவை மக்களுக்கு சொந்தமானவை. திரைகள் அவற்றை பின்பற்றுகின்றன.
டெக்டோனிக் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் இந்த மாற்றம்- ஜியோ ஸ்டாரின் முன் மாதிரியான முயற்சியை தமிழ்நாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக ஆக்குகிறது. இது அதன் லட்சியத்திற்காக மட்டுமல்ல... வாய்ப்பிற்கும், கட்டமைப்பிற்கும் திறவுகோலாகவும் உள்ளது. இந்த புதிய உலகில் ஒவ்வொரு தமிழ் படைப்பாளி - தயாரிப்பாளர் மற்றும் கதை சொல்லியும்... ஒவ்வொரு இந்தியரையும் .... ஒவ்வொரு திரையிலும்.... ஒவ்வொரு நாளும்.... அடைய இயலும்.
பிராந்தியம் என்பது இன்று புதிய தேசியமாகவும்... இனம் புதிய சர்வதேசமாகவும் மாறி வருகிறது. மதுரை - மலப்புரம் - மாண்டியா அல்லது மசிலிபட்டினத்தில் பிறந்த கதைகள் இனி பிராந்திய சினிமா அல்ல. அவை தேசிய கலாச்சார நிகழ்வுகள்.
' காந்தாரா' போன்ற கடலோர கர்நாடகாவின் நாட்டுப்புற கதைகளில் வேரூன்றிய ஒரு திரைப்படம் - முழு நாட்டையும் ஆக்கிரமிக்க முடிகிறது.
ஒரு சாதாரண மனிதன் அசாதாரணமான சக்தியை விஞ்சும் த்ரிஷ்யம் போன்ற ஒரு மலையாள மர்மம்- அனைத்து எல்லைகளையும் எளிதாக கடக்கிறது.
'பாகுபலி' அல்லது 'புஷ்பா' போன்ற ஒரு தெலுங்கு கதை - மும்பையில் இருந்து மலேசியா வரை அன்றாட பேச்சு வழக்கு ஆகிறது.
மேலும் தமிழ்நாட்டில் இருந்து விக்ரமின் இடைவிடாத மனித வேட்டை அல்லது அமரனின் மென்மையான தைரியம் - உண்மையில் பயணிப்பது பட்ஜெட்டால் அல்ல. ஆனால் நேர்மை மற்றும் வேரூன்றிய மக்களின் மனங்களை எதிரொலிக்கும் கதைகள் என்பதை காட்டுகிறது.
இந்த வெற்றிகள் ஒரு எளிய உண்மையை உறுதிப்படுத்துகின்றன. நம்பகத்தன்மை என்பது ஒருபோதும் பணமதிப்பிழக்கச் செய்ய முடியாத ஒரு நாணயம்.
இயல், இசை, நாடகம் மற்றும் சேர நாட்டின் கூத்தம்பலம் ஆகியவற்றின் தொடர்ச்சியின் மூலம் தமிழ்நாடு பல நூற்றாண்டுகளாக இந்த உண்மையில் வாழ்ந்து வருகிறது. அங்கு இலக்கியம், இசை, நாடகம் ஆகியவை ஒரே கலாச்சாரத்தின் இதயத் துடிப்பில் இணைகின்றன. இன்றைய படைப்பாளிகள் புதிய கருவிகளை பயன்படுத்தலாம். ஆனால் உள்ளுணர்வு அப்படியேதான் உள்ளது. உங்கள் கதையை சொல்வதில் தைரியமாக இருக்க வேண்டும்.
இது சாதாரண இந்திய நிகழ்வு அல்ல. ஸ்க்விட் கேம் போன்ற எண்பது மில்லியன் மக்களால் பேசப்படும் பிராந்திய பேச்சு வழக்கிலான ஒரு கொரியன் தொடர் - உலகம் முழுவதும் பில்லியன் கணக்கானவர்களை சென்றடைந்தது. தென்னிந்திய மொழியில் 275 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பேசுவது அதன் உள்ளடக்கத்தின் ஆற்றலை விட மிகப் பெரியது.
ஆனால் கதை சொல்லல் என்பது திறமையால் மட்டும் செழிக்க முடியாது. படைப்பாற்றல் பொருளாதாரம் அதன் சுற்றுச்சூழல் அமைப்புகளான - படைப்பாளிகள்- தொழில்நுட்ப வல்லுநர்கள் -தளங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோரின் சீரமைப்புடன் ஒன்றாக நகரும் போது மட்டுமே செழித்து வளர முடியும்.
அதனால் தான் தலைமை என்பது முக்கியமானது. ஸ்ரீ கெவின் வாஸ் 'சவுத் அன்பாண்ட்'க்கான நோக்கத்தை இங்கு தெளிவாக வழங்கியுள்ளார். தென்னகத்தை ஒரு சந்தையாக அல்ல.. மாறாக ஒரு படைப்பு சார்ந்த ஈர்ப்பு மையமாக வழி நடத்துகிறார். திரு. சுஷாந்த் ஸ்ரீ ராம் மற்றும் திரு. கிருஷ்ணன் குட்டி ஆகியோர் தளம் சார்ந்த உத்தியிலான இந்த கண்ணோட்டத்தை நிலை நிறுத்த உதவியுள்ளனர். இது பிராந்திய படைப்பாளர்களுக்கான உண்மையான வாய்ப்புகளை விரிவு படுத்தும்.
கொள்கை ரீதியாக நமது மரியாதைக்குரிய துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின், நமது மரியாதைக்குரிய முதல்வர் திரு. மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வையால் திறமை மேம்பாடு -பயிற்சி மற்றும் நீண்ட கால படைப்பு சார்ந்த உள்கட்டமைப்பிற்கு ஆதரவளிப்பது இந்தத் துறைக்காக பகிரப்பட்ட எதிர்காலத்தை வழங்குவதை உறுதி செய்கிறது.
இந்த தலைமையின் கீழ் தமிழ்நாடு அரசுக்கும், ஜியோ ஸ்டாருக்கும் இடையே இன்று கையெழுத்திடப்பட்ட 'சவுத் அன்பாண்ட்' எனும் திட்டத்திற்கான புரிந்துணர்வு கடிதம் ஒரு முழக்கம் அல்ல, மாறாக தெற்கின் கதை சொல்லலுக்கான 12,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான உறுதிப்படுத்தப்பட்ட உடன்பாடாகும். இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு மட்டும் நான்காயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த எதிர்காலத் திட்டத்தை நாம் கட்டமைக்கும் போது இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகளில் முன்னோடி ஊடக ஆய்வுத் திட்டங்களில் ஜியோவை கூட்டாளி ஆக்குமாறு நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எழுத்து - ஒளிப்பதிவு - ஒலியமைப்பு - படத்தொகுப்பு - அனிமேஷன் மற்றும் வி எஃப் எக்ஸ் ஆகியவற்றில் கட்டமைக்கப்பட்ட பயிற்சியை விதைக்க முடிந்தால் உள்ளடக்கத்தை மட்டும் அல்ல தொழில் சார்ந்த வாழ்க்கையையும் உருவாக்குவோம். நமது இளைஞர்கள் தங்களது திறமைகளுடன் பொருந்தக்கூடிய பாதைகளுக்கு தகுதியானவர்கள். அதை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் நாம் மேம்படுத்த வேண்டும். உண்மையிலேயே செயல்பாட்டின் திறன் மேம்பாடு என்பது இதுதான்.
எனவே பெண்களே! தாய்மார்களே! இந்தியாவின் ஊடக மற்றும் பொழுதுபோக்கு துறை இன்று எந்த நிலையில் உள்ளது..?
* வரம்பற்ற ஆர்வமுள்ள இளம் பார்வையாளர்கள்....
* வரலாறு காணாத வேகத்தில் விரிவடையும் டிஜிட்டல் பிரபஞ்சம்...
* தேசிய அளவிலான ரசனையை வடிவமைக்கும் ஒரு பிராந்திய இயக்கம்.
" தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தில் ஏராளமான திறமைசாலிகளை வழிநடத்தவும் இவை உறுதி கொண்டுள்ளது.
* புதிய எண்ணங்களால் இந்தியாவிலிருந்து சர்வதேச அளவிலான சந்தையை நோக்கிய நகர்வு
இத்தனை அம்சங்கள் இடம் பிடித்திருப்பதால் ஒரு கதை சொல்லியாக இருப்பதற்கு இதைவிட சிறந்த நேரம் இருந்ததில்லை.
மேலும் இந்தத் தருணத்தை நாம் கைப்பற்றவில்லை என்றால்.. இதைப் போன்ற மற்றொரு நேரத்தை நாம் ஒருபோதும் பார்க்க முடியாது. எனவே இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையை நூறு பில்லியன் டாலர் மதிப்புக் கொண்ட சந்தையாக - எதிர்காலத்தை நோக்கி எடுத்துச் செல்வோம் என தைரியமாக உறுதி அளிப்போம். அவ்வாறு செய்வதன் மூலம் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான தமிழ்நாட்டின் தொலைநோக்குப் பயணத்தை வலுப்படுத்துவோம். நாம் அப்போது கனவு கண்டது.. அதை நாம் இப்போது செயல்படுத்தும் நேரம்.
இன்று இங்கு கூடியுள்ள ஒவ்வொரு படைப்பாளி- தயாரிப்பாளர் மற்றும் அதற்கான கனவு காண்பவர்களுக்கு நான் இதை சொல்ல விரும்புகிறேன். தடைகள் இல்லை. கருவிகள் உங்கள் கைகளில் உள்ளன. அனுமதி பொருத்தமற்றது. தைரியம் தான் வேறுபடுத்துகிறது. தமிழ்நாடு படைப்பாற்றல் மிக்க துணிச்சலுடன் வழி நடத்தட்டும். மொழி, ஒலி, நடிப்பை ஒன்றிணைத்து உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் கதைகளாக மாற்றுவோம்.
புதியதொரு துறையை உருவாக்குவோம். அங்கு கூட்டு ஒத்துழைப்பு பயத்தை மாற்றும்.
சூத்திரத்தை பரிசோதனை மாற்றும்.
வரம்புகளை கற்பனை மாற்றும்.
நம்மை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. தளம் தயாராக உள்ளது. பார்வையாளர்களும் காத்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிற்காக... இந்தியாவிற்காக... உலகத்திற்காக... தைரியமாக- நேர்மையாக- அச்சமின்றி- உருவாக்குவோம்.
நன்றி.




No comments:
Post a Comment