*‘அங்கம்மாள்’ படத்தின் முன்னோட்ட காட்சிகளில் கிடைத்த வரவேற்பைப் போல திரையரங்குகளிலும் இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்!*
இந்த வாரம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) அன்று வெளியாக இருக்கும் ‘அங்கம்மாள்’ திரைப்படத்தின் பிரிவியூ ஷோ சமீபத்தில் திரையிடப்பட்ட நிலையில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நேர்மறையான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இதன் காரணமாக நாளை 90-க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாகிறது. இந்தப் பெருமைமிகு தருணத்தைப் பற்றி தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் எஸ். கார்த்திகேயன் கூறுகையில், “’அங்கம்மாள்’ திரைப்படத்தை முதல் நாளில் இருந்தே நாங்கள் நம்பினோம். சொல்ல வந்த விஷயத்தை ‘அங்கம்மாள்’ மென்மையாகப் பேசினாலும் நீண்ட காலத்திற்கு இந்தக் கதை பற்றி பார்வையாளர்கள் பேசுவார்கள். கதையின் நேர்மையை புரிந்து கொண்டு பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வதைப் பார்ப்பது மிகவும் நிறைவாக இருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவும், குறிப்பாக கீதா கைலாசம் மற்றும் சரண் சக்தி இருவரும் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ’அங்கம்மாள்’ திரைப்படத்தின் மீது நாங்கள் வைத்த நம்பிக்கை இப்போது அதிகரித்திருக்கும் திரையரங்குகள் எண்ணிக்கையிலும் பிரதிபலித்திருக்கிறது. நேர்மையான கதைகள் பார்வையாளர்களை சென்றடையும் என்பதற்கு ‘அங்கம்மாள்’ திரைப்படம் சமீபத்திய உதாரணம். இந்த அற்புதமான படைப்பினை கொடுத்த இயக்குநர் விபினுக்கு நன்றி”.
தயாரிப்பாளர் ஃபிரோஸ் ரஹிம் கூறுகையில், “இந்தப் படம் தாய்மை, கண்ணியம் மற்றும் சாதாரண பெண்களின் அமைதியான வீரத்தை கொண்டாடுகிறது. இதுபோன்ற கதைகள் அரிதாகவே சொல்லப்படும். சிங்க்-சவுண்ட் பதிவு மற்றும் ஒளிப்பதிவு படக்குழுவினருக்கு சவாலான விஷயம் என்பதை மறுக்க முடியாது. அந்த சவாலை ஒட்டுமொத்த படக்குழுவினரும் ஆர்வத்துடன் எடுத்து செய்தனர். பிரீமியர் ஷோவில் கிடைத்த பாராட்டுகள் எங்களின் உழைப்பை பெருமைப்படுத்தியது. இந்தத் தருணத்தில், படப்பிடிப்பின் போது எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்த ஒட்டுமொத்த கிராமத்தினருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் ‘அங்கம்மாள்’ இல்லை” என்றார்.
தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான அஞ்சாய் சாமுவேல் கூறுகையில், “உணர்வுகளும் கலையும் ஒருசேர பயணிக்கும்போது சினிமா அர்த்தமுள்ளதாகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு உருவானதுதான் ’அங்கம்மாள்’ திரைப்படம். பெரும்பாலும் காட்சிகள் மூலம் கதை சொல்லப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஒவ்வொரு நடிகரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்துள்ளனர். பிரிமீயர் ஷோவில் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒட்டுமொத்த குழுவினரின் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கிறேன். இந்தக் கதை மீது நாங்கள் என்ன நம்பிக்கை வைத்தோமோ பார்வையாளர்களும் அதே நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி” என்றார்.
நஜாய் பிலிம்ஸ் & ஃபிரோ மூவி ஸ்டேஷனுடன் இணைந்து, ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ’அங்கம்மாள்’ திரைப்படத்தை வழங்குகிறது.
*நடிகர்கள்:* நடிகை கீதா கைலாசத்துடன் சரண் சக்தி, நாடோடிகள் புகழ் பரணி, முல்லையரசி, தென்றல் ரகுநாதன் மற்றும் வினோத் ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
*தொழில்நுட்பக்குழு விவரம்:*
திரைக்கதை, இயக்கம்: விபின் ராதாகிருஷ்ணன்,
மூலக்கதை: எழுத்தாளர் பெருமாள் முருகன்,
தயாரிப்பாளர்கள்: கார்த்திகேயன் எஸ், ஃபிரோஸ் ரஹிம் மற்றும் அஞ்சாய் சாமுவேல்,
இணைத்தயாரிப்பு: ஷம்சுதீன் காலித் மற்றும் அனு ஆபிரகாம்,
ஒளிப்பதிவு: அஞ்சாய் சாமுவேல்,
இசை மற்றும் பின்னணி இசை: முகமது மக்பூல் மன்சூர்

No comments:
Post a Comment