Featured post

Megastar Chiranjeevi’s Emotional Message On Mana Shankara Vara Prasad Garu

 Megastar Chiranjeevi’s Emotional Message On Mana Shankara Vara Prasad Garu Blockbuster Success Megastar Chiranjeevi once again proved why h...

Tuesday, 20 January 2026

இரண்டாவது முறையாக பெற்றோராகும் இயக்குநர் அட்லீ - பிரியா தம்பதியர்

 *இரண்டாவது முறையாக பெற்றோராகும் இயக்குநர் அட்லீ - பிரியா தம்பதியர்*



இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர இயக்குநரும், தொடர் வெற்றியை வழங்கி வரும் தனித்துவமான படைப்பாளியான இயக்குநர் அட்லீ மீண்டும் சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளார். 


இயக்குநர் - தயாரிப்பாளர் அட்லீ - திருமதி பிரியா அட்லீ இரண்டாவது முறையாக கருவுற்றிருக்கிறார் எனும் மகிழ்ச்சியான செய்தியை.. தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.  இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே மீர் என்ற ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. தற்போது இரண்டாவது முறையாக அட்லீ அப்பாவாகி இருக்கிறார். 


இது தொடர்பாக பிரியா அட்லி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், '' எங்களது குடும்பத்தில் புதிய உறுப்பினர் ஒருவர் இணைகிறார். ஆம்! நான் மீண்டும் கருவுற்று இருக்கிறேன். உங்களுடைய வாழ்த்துகளையும், அன்பையும் எதிர்பார்க்கிறேன்'' என பதிவிட்டு, பிரத்யேக புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். 


இந்த புகைப்படம்-  அட்லீயின் விவரிக்க முடியாத தந்தையின் பாசத்தையும், நேசத்தையும் , புன்னகையுடன் வெளிப்படுவதுடன், தந்தையாக அவரின் பொறுப்புணர்வையும் பிரதிபலிக்கிறது. அத்துடன் பிரியா அட்லீ - மீர் இடையேயான பிரிக்க முடியாத பந்தமும்  இந்த புகைப்படத்தில் இணைந்திருப்பதால்.. உறவின் உன்னதத்தை ஆராதிக்கும் அனைவரும்,  இதனை வரவேற்று தங்களது வாழ்த்துகளைப்  பகிர்ந்து வருகின்றனர்.  


இதனிடையே திருமதி பிரியா அட்லீ & இயக்குநர் அட்லீ உரிமையாளராக இருக்கும் 'பெங்களூரூ ஜவான்'ஸ்' எனும் பிக்கிள்பால் அணி. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி அன்று மும்பையில் தொடங்கும் 'வேர்ல்ட் பிக்ளிபால் லீக் ' போட்டி சீசன் 2 வில் விளையாடுகிறது என்பதும் தற்போது 'ஐகான் ஸ்டார் ' அல்லு அர்ஜுன் நடிப்பில் தயாராகி வரும் #AA22XA6 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment