*அமேசான் பிரைமில் "படையாண்ட மாவீரா"*
வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடித்து ஆகப்பெறும் பரபரப்போடும் விவாதங்களோடும் வெளிவந்து உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிய "படையாண்ட மாவீரா"
தற்பொழுது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளி வந்திருக்கிறது.
வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் "படையாண்ட மாவீரா" கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் இரண்டாவது திரைப்படம்.
படையாண்ட மாவீராவின் மிக முக்கிய கதாப்பாத்திங்களாக சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், "ரெடின்" கிங்ஸ்லி, "நிழல்கள்" ரவி, இளவரசு, தமிழ் கெளதமன், மன்சூரலிகான், "ஆடுகளம்" நரேன், "பாகுபலி" பிரபாகர், "வேதாளம்" கபீர், மதுசூதனராவ், தீனா
தலைவாசல்" விஜய், ஏ.எல். அழகப்பன் ஆகியோரோடு பூஜிதா நாயகியாக நடித்திருக்கிறார்.
மண்ணையும் மானத்தையும் காத்து வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார்,
பின்னணி இசை சாம் சிஎஸ், பாடல்கள் "கவிப்பேரரசு" வைரமுத்து. "ஸ்டண்ட்" சில்வா, நடனம் தினேஷ், ஒளிப்பதிவு கோபி ஜெகதீஸ்வரன், வெற்றிவேல் மகேந்திரன், கலை மோகன், வசனம் பாலமுரளி வர்மன், படத்தொகுப்பு ராஜா முகமது, ஸ்டில்ஸ் அன்பு, மக்கள் தொடர்பு நிகில் முருகன்.
சாதி, மதம், மொழி, இனம், நாடு கடந்து தன் மண்ணையும் மக்களையும் நேசிக்கும் ஒவ்வொரு மனிதனையும் இப்படைப்பு மெய்சிலிப்போடு கொண்டாட வைக்கும் என உறுதிபட சொல்லும் இயக்குநர் வ.கௌதமன் மேலும் இப்படைப்பினை குடும்பங்களோடு பார்ப்பதும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வதும் மிக மிக முக்கியமானது என்கிறார்.
பார்க்குமிடம் அமேசான் பிரைம் ஓடிடி ரெண்டல் தளம்.
Check it out now on Prime Video!

No comments:
Post a Comment