*பாலிவுட்டில் கால் பதித்த இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் (Hesham Abdul Wahab )!!*
தென் இந்தியாவிலிருந்து பாலிவுட் வரை –ஹேஷம் அப்துல் வஹாப் (Hesham Abdul Wahab ) இசைப் பயணத்தின் புதிய அத்தியாயம்!!
தென் இந்திய சினிமாவில் தனது தனித்துவமான இசையால் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் (Hesham Abdul Wahab) பாலிவுட் திரையுலகில் கால்பதித்திருக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலி (Sanjay Leela Bhansali) தயாரிக்கும் “தோ திவானே ஷெகர் மெய்ன்” (Do Deewane Sheher Mein) திரைப்படத்தின் மூலம், ஹேஷாம் இந்தி திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.இது தென் இந்திய திரைப்பட உலகுக்கே பெருமை சேர்க்கும் தருணமாக அமைந்துள்ளது. இசைக்காக அறியப்படும் ஒரு படைப்பாளி, பல மொழித் திரையுலகுகளை வெற்றிகரமாக கடந்து, இந்தியாவின் மிகப்பெரிய சினிமா தளமான பாலிவுட்டில் அறிமுகமாகுவது குறிப்பிடத்தக்கது.
“தோ திவானே ஷெகர் மெய்ன்” Do Deewane Sheher Mein படத்தை ரவி உத்யாவர் Ravi Udyawar இயக்கியுள்ளார். பாலிவுட் பிரபல இசையமைப்பாளர் ஜோடி சச்சின் - ஜிகர் (Sachin–Jigar ) உடன் இணைந்து இப்படத்தில் ஒரு பாடலுக்கு ஹேஷம் இசையமைத்துள்ளார். ஹேஷம் இசையமைத்த பாடலை ஜூபின் நௌடியல் Jubin Nautiyal மற்றும் நீதி மோகன் Neeti Mohan பாடியுள்ளனர்; பாடல் வரிகளை அபிருச்சி Abhiruchi எழுதியுள்ளார்.
இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப், மலையாளம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் பல வெற்றிப்படங்களைத் தந்தவர். குறிப்பாக தெலுங்கு சினிமாவில், குஷி, ஹாய் நானா வெற்றிப்படங்களைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான கேர்ள்ஃபிரண்ட் திரைப்படத்தின் தனித்துவமான இசை அவருக்கு மகுடம் சூட்டியது. மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் Million Dollar Studios தயாரித்த ஒன்ஸ் மோர் திரைப்படமும் , சூரி நடித்த மாமன் படமும் தமிழ் திரையுலகில் அவருக்கு பெரும் பாராட்டுகளை பெற்றுத்தந்தது.
தற்போது ஹேஷம் அப்துல் வஹாப் பல பிரம்மாண்ட படைப்புகளில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். தெலுங்கில் ஆதித்யா ஹாசன் (Adithya Haasan) இயக்கும் பிரம்மாண்ட படம், ஹாய் நானா இயக்குநர் சௌர்யுவ்(Shouryuv) உடன் ஒரு புதிய படம், மேலும் "ஹிட்" படத்தின் இயக்குநர் சைலேஷ் கோலனு (Sailesh Kolanu) உடன் ஒரு திரைப்படத்திலும் பணியாற்றி வருகிறார். மேலும் தமிழில் அர்ஜூன் தாஸ் நடித்துவரும் சூப்பர்ஹீரோ திரைப்படம் , அவரது அடுத்த தமிழ் வெளியீடாக உருவாகி வருகிறது. இதனுடன், பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகும் மேட் இன் கொரியா (Made in Korea) — Netflix நிறுவனம் தயாரிக்கும் முதல் இந்தோ–கொரியன் முழுநீள திரைப்படம் இது.சர்வதேச அளவில் கவனம் பெறும் ஒரு முக்கியமான இந்தியா–தென் கொரியா கூட்டுத் தயாரிப்பாக இந்த படம் உருவாகி வருகிறது.
இதற்கிடையில், ஹேஷம் கன்னட திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். கணேஷ் (Golden Star Ganesh) நடித்துவரும் படத்திற்கு இசையமைத்துள்ளார். மலையாளத்தில், விரைவில் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் மதுவிது திரைப்படத்திற்கும் ஹேஷம் இசையமைத்துள்ளார்.
ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கும் முதல் பாலிவுட் படமான “தோ திவானே ஷெகர் மெய்ன்” (Do Deewane Sheher Mein) படத்தை, ஜீ ஸ்டூடியோஸ் (Zee Studios),ரேங்க்கார்ப் மீடியா (Rankcorp Media), பன்சாலி புரொடக்ஷன்ஸ் (Bhansali Productions), மற்றும் ரவி உத்யாவர் ஃபிலிம்ஸ் (Ravi Udyawar Films ) இணைந்து தயாரித்துளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது

No comments:
Post a Comment