Featured post

Docu Fest Chennai தென் ஆசியாவிலும் அதற்கு அப்பாலும் உருவாகும்

Docu Fest Chennai தென் ஆசியாவிலும் அதற்கு அப்பாலும் உருவாகும் ஆவணப்படங்களை கொண்டாடும் ஒரு விழாவாகும். மறைந்துள்ள உண்மைகளை வெளிப்படுத்தவும், ...

Thursday, 22 January 2026

புதியவர்களுக்கு மேடை அமைக்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி K கணேஷ் – மாயபிம்பம் இயக்குநருக்கு புதிய வாய்ப்பு

 புதியவர்களுக்கு மேடை அமைக்கும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்  ஐசரி K கணேஷ் – மாயபிம்பம் இயக்குநருக்கு புதிய வாய்ப்பு !! 



தமிழ் சினிமாவில் புதிய முகங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு நம்பிக்கையுடன் பெரிய வாய்ப்புகளை வழங்கி வருவது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முக்கிய அடையாளமாக இருக்கிறது. அந்த வரிசையில், “மாயபிம்பம்” திரைப்படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஐசரி K கணேஷ், படத்தின் இயக்குநரின் முயற்சியையும், கதை சொல்லும் விதத்தையும் மனதார பாராட்டி, அவருக்கு உடனடியாக புதிய பட வாய்ப்பை வழங்கியுள்ளார். புதிய இயக்குநர்களை ஊக்குவித்து, அவர்களின் திறமையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் இந்த அணுகுமுறை, வேல்ஸ் ஃபிலிம்ஸின் தயாரிப்பு முக்கிய நோக்கத்தை, மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துகிறது.




தமிழ் திரையுலகில் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை வழங்கி வரும் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், இன்றைய தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தற்போது முன்னணி நட்சத்திர நடிகராக உயர்ந்துள்ள பிரதீப் ரங்கநாதன், நடிகர்–இயக்குநர் RJ பாலாஜி, டயங்கரம் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமாகும் VJ சித்து உள்ளிட்ட பல திறமைவாய்ந்தவர்களை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வித்தியாசமான களங்கள், புத்தம் புதிய ஐடியாக்கள், இளம் படைப்பாளிகளின் கனவுகளை நிஜமாக்கும் முயற்சிகள் ஆகியவை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தை, தனித்துவமான நிறுவனமாக மாற்றியுள்ளன.



சமீபத்தில் மாயபிம்பம் படம் பார்த்த தயாரிப்பாளர் ஐசரி K கணேஷ், இயக்குநரின் நேர்மையான முயற்சியையும், குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் கதையை அணுகிய விதத்தையும் பாராட்டியுள்ளார். “ஒரு புதிய இயக்குநர், முற்றிலும் புது முகங்களை வைத்துக்கொண்டு எளிமையான ஆனால் தாக்கம் கொண்ட கதையை சொல்லியுள்ளார்  எனப் பாராட்டியுள்ளார். இந்த பாராட்டு படக்குழுவின் உழைப்பிற்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக அமைந்தது. 



ஒருபுறம் பல புதிய படைப்புகள் வேல்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் உருவாகிக் கொண்டிருக்க, மறுபுறம் “மாயபிம்பம்” படத்தின் இயக்குநர் K. J. Surender இயக்கும் புதிய படம் விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில், K.J. சுரேந்தர் தயாரித்து, எழுதி, இயக்கியுள்ள மாயபிம்பம் திரைப்படம், ஜனவரி 23ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2005 காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு, உருவாகியுள்ள  இந்த கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெய்னர், ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் – வெறும் படங்களைத் தயாரிக்கும் நிறுவனமாக  மட்டுமல்லாமல்; புதிய கனவுகளை கண்டறிந்து, அவற்றைத் திரையில் மேஜிக்காக மாற்றும் ஒரு  அற்புத பயணமாகத் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment