Mellisai Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mellisai படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Dhirav. இந்த படத்துல G.Kishore Kumar ,Subatra ,MaryanRobert ,George Maryan ,Harish Uthaman ,Dhananya Varshini ,Jaswant Manikandan னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாப்போம்.
rajan அ நடிச்சிருக்க kishore ஒரு school ல pt teacher அ work பண்ணிட்டு இருக்காரு. இவருக்கு singing ன்றது passion ஒரு பக்கம் teacher அ இருந்தாலும் இவரோட passion யும் follow பண்ணிட்டு இருக்காரு. இவரோட wife தான் vidya வ நடிச்சிருக்க Subatra Robert , இவங்களும் அதே school ல தான் ஒரு teacher அ work பண்ணிட்டு இருப்பாங்க. இவங்களுக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. இவங்க ஒரு சாதாரண middle class family தான். ரொம்ப வசதி இல்லனாலும் இருக்கிறதா வச்சுக்கிட்டு சந்தோசமா இருக்கற ஒரு குடும்பம் தான் இவங்க. இப்போ Rajan க்கு அவரோட job எல்லாம் பிரச்சனை ஆயிடுது, அதே சமயம் இவரோட பெரிய பையன்க்கு ஒரு IT கம்பெனி ல வேலை கிடைக்குது. வேலை கிடைச்சு family க்கு support பண்ணுற பையனோட character வேற மாதிரி மாறிடுது. இதுனால இவங்க குடும்பத்துல ஒரு விரிசல் விழுது. இந்த விரிசல் சரி ஆச்சா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
ஒரு middle class family க்குல வர பிரச்சனைகள், ego , கோவம், பொறாமை , பசங்க parents கிட்ட திமிர நடந்துக்கறது னு பல விஷயங்களை இந்த படத்துல காமிச்சிருக்காங்க. kishore எப்பவும் போல ஒரு super ஆனா performance அ குடுத்திருக்காரு. ஒரு பக்கம் தன்னோட job ல வர பிரச்சனைகளை நினச்சு வர வருத்தம் இன்னொரு பக்கம் அவரோட பெரிய பையன்க்கு நல்ல வேலை கிடைச்சிருக்கு நினச்சு வர பெருமை னு ரொம்ப நேர்த்தியா நடிச்சிருக்காரு. subathra ஓட performance யும் நல்ல இருந்தது.
இந்த படத்தோட கதையை ஒரு flashback story மாதிரி தான் கொண்டு வந்திருக்காங்க. இதுல வர நெறய விஷயங்கள் real life ல நடக்கிறது தான் அதுனால அதா பாக்கும்போது audience ஆழ relate பன்னிக்கமுடியும். music, visual எல்லாமே அட்டகாசமா இருந்தது. இந்த படத்தை பாக்கும்போது பசங்க வாழக்கை ல parents ஓட importance எவ்ளோ முக்கியம், emotional அ connect ஆகுறது, life ல நெறய விஷயங்கள் இருந்தாலும் நேரத்துக்கு ஏத்த மாதிரி priority குடுக்க தெரிறது னு நெறய விஷயங்களை இந்த படம் மூலமா சொல்லிருக்காங்க.
actors ஓட strong ஆனா performance , மனச நெருடரா மாதிரியான கதைக்களம் தான் இது. சோ மறக்காம இந்த படத்தை theatre ல போய் பக்க miss பண்ணிடாதீங்க.

No comments:
Post a Comment