*செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிப்பில் L. K. அக்ஷய் குமார் நடிக்கும் 'புரொடக்ஷன் நம்பர் 13 ' படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டு, படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது*
'சிறை ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அழுத்தமான அடையாளத்தை பதிவு செய்திருக்கும் நடிகர் L. K. அக்ஷய் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் 'புரொடக்ஷன் நம்பர் 13' படத்தின் பூஜை சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத திரைப்படத்தில் L. K . அக்ஷய் குமார், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA , ஷாரீக் ஹாஸன் மற்றும் 'டியூட்' படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை P. S. ஹரிஹரன் கவனிக்கிறார். பிரியா ஆடை வடிவமைப்பாளராகவும், K. அருண் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஃபன் என்டர்டெய்னராக (( Fun Entertainment)) தயாராகும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தில் L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராகியிருக்கிறார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வரும் இந்த படத்தை எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
புதுமுக நடிகர் L. K .அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான, 'சிறை ' திரைப்படம் இதுவரை உலக அளவில் 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. இதனால் நடிகர் L. K. அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகி வரும் இப்படத்தினை பற்றிய புதிய அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.




No comments:
Post a Comment