Featured post

தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி வழங்கும் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் 'திரெளபதி

 *தயாரிப்பாளர் சோலா சக்ரவர்த்தி வழங்கும் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் 'திரெளபதி 2'!* இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் வகையிலா...

Friday, 23 January 2026

திரௌபதி 2 தமிழ்நாட்டின் மறக்கப்பட்ட பாரம்பரியத்தை மீண்டும் உயிர்ப்பிக்கிறது” – இயக்குநர் மோகன் ஜி

 *“திரௌபதி 2 தமிழ்நாட்டின் மறக்கப்பட்ட பாரம்பரியத்தை மீண்டும் உயிர்ப்பிக்கிறது” – இயக்குநர் மோகன் ஜி!*





‘திரௌபதி’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மோகன் ஜி, தற்போது மிகப் பெரும் வரலாற்றுக் காவியமான ‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளுக்கு வருகிறார். துணிச்சலான கதை சொல்லல் மற்றும் வரலாற்று நுணுக்கங்களில் மிகுந்த கவனம் செலுத்தும் இயக்குநராக அறியப்படும் மோகன் ஜி, 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹோய்சால பேரரச வம்சத்தின் மகத்துவத்தை மீண்டும் உயிர்ப்பிக்க தமிழ் சினிமாவின் சிறந்த கலைஞர்களை ஒருங்கிணைத்துள்ளார். ஜனவரி 23 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாகவும், தமிழ்நாட்டின் செழுமையான ஆனால் மறைக்கப்பட்ட பாரம்பரியத்தை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு வரலாற்று சினிமா ஆவணமாகவும் இருக்கும் என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.


படம் குறித்து மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “’திரௌபதி 2’ திரைப்படம் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹோய்சால பேரரச வம்சத்தின் வரலாற்றை எந்த சமரசமும் இல்லாமல், துல்லியமான வரலாற்று உண்மைகளுடன் மீண்டும் உயிர்ப்பிக்கிறது. மன்னர் வீர சிம்ம கடவராயனாக ரிச்சர்ட் ரிஷி திரையில் பேரரசருக்கே உரிய கம்பீரமும் அதிகாரமும் நிறைந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை பேரரசர்களின் ஆன்மாவை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. 


ஒளிப்பதிவாளர் பிலிப் கே. சுந்தரின் ஒளிப்பதிவு அரச கம்பீரத்தை அழகாகப் பதிவு செய்கிறது. ஆக்‌ஷன் சந்தோஷ் அமைத்த போர் காட்சிகள் வரலாற்று காவியங்களுக்கு இணையானவை. ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ் தீவிரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு பேரரசின் எழுச்சி- வீழ்ச்சி மூலம் தமிழ் வீரத்தின் வரலாற்றை பதிவு செய்யும் தமிழ் சினிமாவின் மிகத் துணிச்சலான வரலாற்று திரைப்படத்தை நேதாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது” என்றார். 


இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சோலா சக்கரவர்த்தி  தயாரிப்பில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷியுடன் ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


*தொழில்நுட்பக் குழு:*


இசை: ஜிப்ரான்,

ஒளிப்பதிவு: பிலிப் கே. சுந்தர், 

கலை இயக்குநர்: எஸ். கமல், 

சண்டைப் பயிற்சி: ஆக்‌ஷன் சந்தோஷ், 

படத்தொகுப்பு: எடிட்டர் தேவராஜ்

No comments:

Post a Comment