Featured post

“Thavasimuthu Is One of the Most Challenging Characters I Have Portrayed” – Actor Karunaas on ‘Enna Vilai’

 *“Thavasimuthu Is One of the Most Challenging Characters I Have Portrayed” – Actor Karunaas on ‘Enna Vilai’* Actor Karunaas, who has succes...

Showing posts with label நடிகர் விஷால். Show all posts
Showing posts with label நடிகர் விஷால். Show all posts

Saturday, 22 December 2018

தயாரிப்பாளர் சங்க செயல் உறுப்பினர் தொடர்ந்த வழக்கு

தயாரிப்பாளர் சங்கத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் விஷால் எதிர்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தயாரிப்பாளர் சங்க செயல் உறுப்பினர் அன்புதுரை(விஷால் அணி) தொடர்ந்த வழக்கு..

விஷால் மீது கைது நடவடிக்கை எடுத்ததற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்

தேர்தலில் தலைவராக தேர்வு செய்யப்பட்ட விஷாலை தயாரிப்பாளர் சங்கத்திற்குள் நுழைய விடாதது ஏன்...? 

தயாரிப்பாளர்கள் சங்கத்தை பூட்டு போட யார் அதிகாரம் கொடுத்தது...?

இந்த பிரச்சினைகளை நீதிமன்றம் மூலமாகவே தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும்..

ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் நடைபெற்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட விஷாலின் பதவி காலம் இன்னும் முடிவடையாத நிலையில் அவரை சங்கத்திற்குள் அனுமதிக்காதது ஏன்...??

விஷால் மீது கொடுக்கப்பட்ட புகார் மீது தாசில்தார் சீல் வைத்தது ஏன்...??? - நீதிபதி கேள்வி

சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற நீதிமன்றம் உத்தரவு.

அனைத்து ஆவணங்களையும் சங்கங்களின் துணை பதிவாளரிடம் ஒப்படைக்க நீதிபதி ஆனந்த வெங்கடேசன் உத்தரவு

Wednesday, 5 December 2018

வித்தியாசமாக உதவிய நடிகர் விஷால்

கஜா புயலால் பாதித்தவர்களுக்கு  வித்தியாசமாக உதவிய நடிகர்  விஷால்   

மூன்று வாரங்கள் கடந்த நிலையிலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகள் இன்னும் மீளாத் துயரில் தத்தளிக்கிறது. இந்நிலையில் கஜா புயலில் பாதித்த 14 குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக கடலூர் கவிதாலயா தியேட்டரில் திண்பண்டங்கள் விற்பனை செய்தும், அந்தப் பகுதியில் மூட்டைத் தூக்கி அதில் கிடைத்த தொகையையும் கஜா புயலில் பாதித்தவர்களுக்காக அளித்துள்ளார்.


















இது வரும் ஞாயிற்றுக்கிழமை சன் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகும் ‘சன் நாம் ஒருவர்’ நிகழ்ச்சியில் வரவிருக்கிறது.  இந்நிகழ்ச்சியில் இதுவரை வாரம்  ஒரு நபருக்கு மட்டுமே உதவி என்ற வரிசையில் நடைபெற்று வந்தது. ஆனால் வரும் வாரம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு உதவி செய்யும் அத்தியாயம் வர உள்ளது. நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்களின் பரிதாப நிலை குறித்தும் பேசுகிறார்கள்.  நடிகர் விஷால் நடத்தும்  இந்த நிகழ்ச்சியில்  இந்த வாரம் சமுத்திக்கனி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.  கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்வதை கேட்டு கண்ணீர் வடித்ததோடு,

‘‘கஜா புயல் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களை திண்றுவிட்டது. இது ஏதோ வேறு ஒரு நாட்டில் நடந்ததைப் போல இப்போதும் பலர் நினைப்பதுதான் வேதனையாக இருக்கிறது!’’ என்றார்