Featured post

சிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “கில்லர் டேவிட்” திரைப்படத்தின் பூஜை இன்று வெற்றிகரமாக நடைபெற்றது

 சிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “கில்லர் டேவிட்” திரைப்படத்தின் பூஜை இன்று வெற்றிகரமாக நடைபெற்றது. இப்படத்தின் இயக்குநர் சிவானி செந...

Showing posts with label Actor Jeeva. Show all posts
Showing posts with label Actor Jeeva. Show all posts

Tuesday, 3 December 2019

ஜீவா நடிக்கும் சீறு


இசையமைப்பாளர் டி.இமான் புதிய திறமைகளை கண்டுபிடித்து இசையுலகுக்கு அறிமுகப்படுத்தி, வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதில் ஆர்வம் மிக்கவர். அவரது ஆச்சரியப்படத்தக்க சமீபத்திய கண்டுபிடிப்புதான் திருமூர்த்தி. ஜீவா நடிக்கும் 'சீறு' படத்தில் பின்னணி பாடகராக அறிமுகமாகும் திருமூர்த்தி, இனிய குரல் வளமும் திறமையும் ஒருங்கே அமையப் பெற்றவர்.

 உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அருமையான இசை வடிவல் உருவாகியிருக்கும் இந்தப் பாடலை பார்வதி எழுதியிருக்கிறார். இது குறித்து பார்வதி தெரிவித்ததாவது...

"பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ற பாடல்களை இதுவரை நான் எழுதியிருக்கிறேன். ஆனால் 'சீறு' படத்துக்காக எழுதிய பாடலை விசேடமான அனுபவம் என்றுதான் கூற வேண்டும். திறமை மிக்க அறிமுக பாடகர் திருமூர்த்தி பாடிய இந்தப் பாடலை நான் எழுதியிருப்பதை எனக்குக் கிடைத்த கெளரவமாகவே நினைக்கிறேன். 'ஜில்லா' படத்துக்காக இமான் இசையில் நான் எழுதிய "வெரசா போகயிலே..." பாடலுக்குப் பிறகு இப்போது மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறேன்.

பாடலுக்கான சூழலை இயக்குநர் ரத்தின சிவா என்னிடம் விவரித்துவிட்டு, சில விஷுவல் காட்சிகளையும் திரையிட்டுக் காட்டினார். அவற்றைப் பார்த்த பிறகு நிறைய பாடல் வரிகள் எனக்குத் தோன்றியது. உண்மையில் பாடலின் ட்யூனுக்குள் வார்த்தைகளை அடக்குவது என்பது கடினமான பணி என்றாலும், இமானின் அழகான ட்யூனுக்கு, ஆழமான  பாடல் வரிகள் கன கச்சிதமாகப் பொருந்தி சிறப்பாக அமைந்துவிட்டது.

பாடல் வரிகளைக் கேட்டதுமே இசையமப்பாளர் இமானும், இயக்குநர் ரத்தின சிவாவும் என்னை வெகுவாகப் பாராட்டினார்கள். இவை அனைத்துக்கும் மேலாக பாடகர் திருமூர்த்தி அனுபவித்து, ரசித்து பாராட்டுக்குரிய விதத்தில் இந்தப் பாடலைப் பாடியிருப்பதுதான் பாடலின் சிறப்பம்சமே. பாடல் பதிவு முடிந்ததும், திருமூர்த்தி தனக்குப் பிடித்த வரிகள் என்று சிலவற்றைச் சொல்லி பாடிக் காட்டியபோது நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன்.

 தொடர்ந்து ஹிட் பாடல்களைக் கொடுத்து இமையமைப்பாளர் இமானுடன் இசைப் பயணத்தைத் தொடர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனலுக்காக டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரிக்க, ரத்தின சிவா இயக்கும் சீறு படத்தில் ஜீவா, ரியா சுமன் ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர். நவ்தீப் எதிர்மறை வேடத்தில் நடிக்க, காயத்ரி கிருஷ்ணா மற்றும் சதீஷ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். எதிர்வரும் டிசம்பர் 20ஆம் தேதி உலகெங்கும் திரைக்கும் வரும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்க, பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

Saturday, 12 January 2019

என் வாழ்க்கையில் சந்தோஷமான தருணம் இது ஹிந்தியில் கால் பதிக்கிறேன் - ஜீவா


                  என் வாழ்க்கையில் சந்தோஷமான தருணம் இது
         ஹிந்தியில் கால் பதிக்கிறேன்    ஜீவா
          
இளம் நடிகர்களில் திறமை வாய்ந்தவர் என்ற பெயர் பெற்றவர் நடிகர் ஜீவா...
எண்ணிக்கையை விட என்ன படம் செய்கிறோம் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஜீவாவுக்கு சங்கிலி புங்கிலி ,கலகலப்பு என வெற்றிப் படங்கள் அமைந்து நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது.
    சமீபத்தில் அவரை சந்தித்து பேசிய போது....
அவரது முதல் ஹிந்தி பிரவேசத்திற்கு வாழ்த்து சொல்லி ஆரம்பித்தோம்...          இந்த 2019 உங்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கை தரும் ஆண்டாக இருக்கும் அல்லவா..
    *  நிச்சயமாக...2018 லேயே எனக்கு அந்த நம்பிக்கை ஏற்பட்டது...
சங்கிலி புங்கிலி படமும் கலகலப்பு படமும் வெற்றி பெற்று எனக்கு உற்சாகத்தை கொடுத்தது... அதற்கு பிறகு நிறைய கதைகள் கேட்டேன்...அதில் சிறந்ததாக கொரில்லாஜிப்ஸி என இரண்டை மட்டும் தேர்வு செய்தேன்....இந்த இரண்டு படங்களும் ரொம்ப சிறப்பாக வந்திருக்கு. தற்போது மொத்தம் ஆறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்...  இப்போ சூப்பர்குட் பிலிம்ஸ் 90 வது படமாக  SGF 90 படத்தில் நானும் அருள் நிதியும் சேர்ந்து நடிக்க சூட்டிங் விறு விறுப்பா போயிட்டிருக்கு.. .டைட்டில் கூடிய சீக்கிரம் சொல்வோம்...ஜாலியான படமா இருக்கும்..
மல்டி ஸ்டார் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கீங்க...எப்படி செலக்ட் செய்றீங்க...

·         முதல்ல கதை...அதற்கப்புறம் கேரக்டர்...இரண்டும் பிடிச்சிருந்தா ஓ.கே சொல்வேன்...நல்ல டீம் அமைஞ்சா நடிக்க தயாராயிடுவேன்...அப்படி நடிச்சி ஹிட்டான படம் தான் கலகலப்பு 2..
     முதல் முதலா ஹிந்தி படத்துல நடிக்கிறீங்க...அது பற்றி சொல்ல முடியுமா...

·         நிச்சயமா..."1983 வேர்ல்ட் கப் " என்ற படத்துல நடிக்கிறேன்...ரன்வீர் சிங் நடிக்கிறார்...மல்டி ஸ்டார் மூவி...பாகுபலி எப்படி ஸ்கிரீன்ல பிரமாண்டத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்துச்சோ...அது மாதிரி இந்த படமும் இருக்கும்...100 கோடிக்கு மேல செலவு செய்து எடுக்குற படம்...

நான் கிரிக்கெட்ல ரொம்ப ஆர்வம் உள்ளவன்...நிறைய கிரிக்கெட் மேட்ச்ல ஜாயின் பண்ணி இருக்கேன்..ஜெயிச்சிருக்கேன்...அப்படிப் பட்ட எனக்கு கிடைச்ச முதல் ஹிந்திப் படமே கிரிக்கெட் சம்மந்தப் படம்னு சொல்லும் போது எப்போ காமிரா முன்னாடி நிப்போம்னு ஆர்வமா இருக்கேன்...

1983 ல இந்தியா வேர்ல்ட் கப் ஜெயிச்சி பெருமை தேடிக் கொடுத்த அந்த சம்பவங்கள் தான் கதைக்களம்...
கிட்டத்த 100 நாள் லண்டன்ல ஷுட்டிங்...அதுக்கு இப்பவே தயாராயிட்டு இருக்கோம்..அப்போ அந்த டீம்ல இருந்த நல்ல கிரிக்கெட்டர்  கிருஷ்ணமாச்சாரி  ஸ்ரீகாந்த்   சார்...அவரது கதாபாத்திரத்தில் நடிக்கிறது எனக்கு பெருமை தானே...தமிழ்  நாட்டு வீரர்கள்ன்னு எடுத்துக்கிட்டா நாலு பேர் தானே...
அந்த கேரக்டர் எனக்கு கிடைச்சது பெருமையான விஷயம் தானே...
மே மாசம் ஷுட்டிங் லண்டன்ல ஆரம்பிக்குது...
மிகப் பிரபலமான பெளலரான சந்து வீட்டுக்கே வந்து கோச் கொடுத்துட்டு இருக்கார்...இப்பவே அந்த படத்துக்கு தயாராயிட்டு இருக்கோம்..
லகான் , M.S.டோனி படங்கள் வரிசையில் 1983 வேர்ல்ட் கப் படத்துக்கும் இப்போதே எதிர்பார்ப்பு எகிறி கிடக்கு...
இனிமே யானை மாதிரி நான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் பதியற மாதிரி இருக்கும்..2019 எனக்கு மட்டுமில்ல...சினிமாவுக்கே நல்லது நிறைய நடக்கும்னு நிறைய நம்பிக்கை இருக்கு  தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்...சினிமாவுக்கு நல்ல வழி கிடைக்க வேண்டும்... அனைவருக்கும் தை பொங்கல் வாழ்த்துகள்.... உழவு தொழில் சிறக்கட்டும்.. உயரிய நிலை அடையட்டும்...என்றார் ஜீவா..