Featured post

ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே (Spider-Man: Brand New Day) - டாம் ஹாலண்டின் சூப்பர் ஹீரோ கதாபாத்திரம்

 *ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே (Spider-Man: Brand New Day) - டாம் ஹாலண்டின் சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் ஜெண்டாயாவின் 'MJ' உடனான காதல...

Showing posts with label Vijay Antony. Show all posts
Showing posts with label Vijay Antony. Show all posts

Friday, 15 May 2020

இன்றைய கஷ்டமான சூழ்நிலையில் குடும்பங்கள் சில நேரம் மகிழ்ந்திருக்க காரணம்

இன்றைய கஷ்டமான சூழ்நிலையில் குடும்பங்கள் சில நேரம் மகிழ்ந்திருக்க காரணம் சினிமா , அதனால் தான் அனைத்து முன்னணி சேனல்களும் 24 மணி நேர சினிமா சேனல்களாக மாறிவிட்டன , இப்படி மக்களை மகிழ்விக்கும் சினிமாக்களை கோடிகள் வாரி இறைத்து தயாரிக்கும் தயாரிப்பாளரின் நிலை எப்போதுமே கேள்விகுறிதான் , 

இதோ இந்த நீண்ட லாக்டவுனுக்கு பிறகு அனைத்து துறைகளும் செயல்பட ஆரம்பிக்கும் ஆனால் பைனான்ஸ் வாங்கி இடையில் லாக்டவுனினால் நின்று போயிருக்கும் , ரிலிஸ் நேரத்தில் மாட்டிக்கொண்டு இனி எப்போது ரிலிஸ் தேதி கிடைக்கும் என போராடிக்கொண்டிருக்கும் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் நிலைமை எப்போதும் போல பரிதாபதக்குரியது தான் , நடிகர் , நடிகைகள் , டெக்னிசியன்கள் அனைவருக்கும் வேலை கிடைத்துவிடும் சம்பளமும் கிடைத்துவிடும் ஆனால் முதலீடு செய்யும் முதலாளிகள் நிலைமை ...






இதற்கு ஒரு முற்றுபுள்ளி வராதா, எங்கள் பாரங்களை தோளோடு தோள் சேர்த்து தூக்கி செல்ல யாரும் வரமாட்டார்களா என நாங்கள் யோசித்துக்கொண்டிருக்கும் போது தமிழ்சினிமாவின் தற்போது தவிர்க்க இயலாத ஹீரோ விஜய் ஆண்டனி அவர்கள் தாமாகவே முன்வந்து தனது சம்பளத்தில் 25% வேண்டாம் என அறிவித்து அவர் நடித்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் நெஞ்சில் பாலை வார்த்துள்ளார் 

ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் , நல்ல மனிதராகவும் இருப்பதால் மட்டுமே திரு.விஜய் ஆண்டனி அவர்கள் தயாரிப்பாளர்கள் சார்பாக யோசித்து எங்கள் வலியை உணர்ந்து இப்படி ஒரு நல்ல அறிவிப்பை அறிவித்துள்ளார் 





இதன் மூலம் சில கோடிகளை அவர் இழக்கலாம் , ஆனால் பல கோடி நெஞ்சங்களில் நிலைத்துவிட்டார் , கொரானாவிற்கு பின் வரும் கடின காலக்கட்டங்களில் சினிமாத்துறை என்ன ஆகும் ? எப்படி இந்த இழப்புகளில் இருந்து முன்னேறும் என்ற அனைவரும் கலங்கி நிற்கும் போது ஒரு வழிகாட்டியாக , ஒரு முன்மாதிரியாக விஜய் ஆண்டனி தற்போது வெளிவந்துள்ளார் , இவரைபோல மற்ற அனைத்து நடிகர், நடிகைகள் ,டெக்னிசியன்கள் அனைவரும் இதைபோல சம்பளத்தை குறைத்து பாரத்தை தயாரிப்பாளருடன் தோளில்  சுமந்து செல்ல தயாராக இருந்தால் எந்த இடர் வரினும் தமிழ்சினிமா வீழாது, பீனிக்ஸ் போல எழுந்து நிற்கும் 

இது நாம் ஒன்றினையும் நேரம் , எங்களுக்காக தோள் கொடுத்திருக்கும் விஜய் ஆண்டனி அவர்களுக்கு அனைத்து தயாரிப்பாளர்களின் சார்பில் ஒரு பெரும் நன்றியை தெரிவிததுக்கொள்கிறேன்

Vijay Antony’s Magnanimous Gesture to Support his Producers'

Vijay Antony’s Magnanimous Gesture to Support his Producers'

Vijay Antony, one of the Popular heroes of Tamil cinema who recently gave a Hit in ‘Kolaigaran’ also has substantial reach even among Telugu audience. His films are a big hit in Television whenever they are telecast. His film Pichaikkaran holds the top TRP rating in Television viewing. His recent film Thimiru Pudichavan scored viewers impressions (13.11 Million) next only to Darbar and Seemaraja when it was telecast on 14th April 2020.


Vijay Antony is currently busy in acting in three films namely Tamizharasan for Producer FEFSI Shiva, Agni Siragugal for Amma Creations T. Siva and Khaki for Director Senthil Kumar of Open Theatre and Infiniti Film Ventures. All these three films are in various stages of completion and gearing up for release soon.
As Tamil cinema got affected due to Corona lock down from March 2020, the completion and release of these three films were delayed by three months and by the time these film’s release, it may take another three to four months. Considering the loss that will be incurred by these three Producers, with a view to support them to overcome from this situation, Vijay Antony came forward and offered 25% reduction in his salary for these three films. With this support, he is confident the Producers will be able to bring down their overall cost and ensure these three films have a smooth release.



Commenting on this magnanimous gesture, Producer Amma Creations T. Siva stated that, “It is very kind of Vijay Antony to accept salary reduction considering the situation we are in due to the lock down for over 50 days and the further delay expected in releasing the films. We request that all actors and technicians should also come forward and accept reduced salaries so that the overall cost of all the current film producers reduces to tide over the crisis all of us are all facing currently. By accepting this reduction in the agreed salary, Vijay Antony is becoming an example for being a good Producer’s Actor and we wish him all the success in his future films.” Other Two Film Producers have also wholeheartedly welcomed this ‘voluntary salary reduction support’
offered by Vijay Antony.


Tuesday, 31 December 2019

தமிழரசன் " படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையில்

தமிழரசன் " படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பி, கே.ஜே.யேசுதாஸ் பாடல்!
 
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  " தமிழரசன் " இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சுரேஷ்கோபி, ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா,ஒய்.ஜி.மகேந்திரன், கதிர்ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன்முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்..


























ஒளிப்பதிவுஆர்.டி.ராஜசேகர்
இசை  -   இளையராஜா
பாடல்கள்  -  பழனிபாரதி, ஜெய்ராம்
கலை  -   மிலன்
ஸ்டண்ட்  -   அனல் அரசு
எடிட்டிங்   -   புவன் சந்திரசேகர்
நடனம்   -      பிருந்தா சதீஷ்
தயாரிப்பு மேற்பார்வை   -     ராஜா ஸ்ரீதர்
கதை திரைக்கதை வசனம் இயக்கம்  -   பாபு யோகேஸ்வரன்
தயாரிப்பு  -    கெளசல்யா ராணி
படம்ன பற்றி இயக்குனர்  பாபு யோகேஸ்வரன். ..
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் விஜய்ஆண்டனி சூழ்நிலை காரணமாக  ஒரு போராளியாக மாறுவதுதான் இந்த படத்தின் திரைக்கதை.
இசைஞானி இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். இந்த படத்திற்காக   S.P.B  ஒரு பாடலையும்,  12 வருடங்களுக்கு  பிறகு இளையராஜாவின் இசையில் கே.ஜே.யேசுதாஸ் ஒரு பாடலையும் பாடி இருக்கிறார்கள். அந்த பாடல்கள் 2020 ம் ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களாக வலம் வரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார் படத்தின் இயக்குனர் பாபு யோகேஷ்வரன்.
படம் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.

Saturday, 24 August 2019

Infiniti Film Ventures Acquires Vijay Antony’s Khaki



Infiniti Film Ventures acquires Vijay Antony’s Forthcoming film KHAKI Chennai, August 23, 2019: Infiniti Film Ventures which has commenced a film of Director Vijay Milton and Vijay Antony combination has acquired Vijay Antony’s forthcoming film KHAKI directed by experienced director A. Senthil Kumar.

Khaki a multi-starrer starring Vijay Antony, Sathyaraj, Srikanth, Indhuja, Eswari Rao, John Vijay, Ravi Maria in pivotal roles started rolling in June 2019 and more than 50% of the film was already shot in fantastic locations like Shimoga, Bengaluru and Chennai. Currently the film is in the second phase of shooting and is expected to be completed by October 2019. The film has cinematography by popular cinematographer Manoj Paramahamsa, music by Augath, lyrics by ‘Kaviperarasu’ Vairamuthu, action by Kanal Kannan -Shyam and editing by Ruben. The film is written and directed by A. Senthil Kumar. The film is a family entertainer in the backdrop of action.

Team of M/s Infiniti Film Ventures, after having watched the edited version of the film shot till date and understanding the merit of the story have acquired all the rights of the film and shall be backing the film in marketing, distribution and exploitation along with the producer M/s Open Theatre.

The team is targeting to release the first look in September, teaser/trailer in October 2019 and hit the screens in January 2020.

Infiniti Film Ventures is targeting a January 2020 release Film Details:
Title: Khaki
Genre: Family Entertainer
Cast: Vijay Antony, Sathyaraj, Srikanth, Indhuja, Eswari Rao, John Vijay, Ravi Maria Sun Tv Fame ‘Kathir and many others.
Music: Augath
Lyrics: ‘Kaviperarasu’ Vairamuthu
Cinematography: Manoj Paramahamsa
Action Choreography: Kanal Kannan - Shyam
Producer-Director: A. Senthil Kumar
Presented by: M/s INFINITI FILM VENTURES, Mr. Kamal Bohra, Lalitha Dhananjayan, B. Pradeep and Pankaj A.
Film Status: Under shooting
Release plan: January 2020
PRO: Nikil Murukan

Wednesday, 10 April 2019

இந்தி தயாரிப்பாளர்களுக்கு தெரிந்தது, கன்னட இயக்குனர்களுக்கு தெரிந்தது, ஏன் தமிழ் சினிமாகாரர்களுக்கு தெரியவில்லை - நடிகை ஆண்ட்ரியா ஆதங்கம்



"தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி" - ஆண்ட்ரியாவிற்கு புகழாரம் சூட்டிய விஜய் ஆண்டனி!!

இந்தி தயாரிப்பாளர்களுக்கு தெரிந்தது, கன்னட இயக்குனர்களுக்கு தெரிந்தது, ஏன் தமிழ் சினிமாகாரர்களுக்கு தெரியவில்லை - நடிகை ஆண்ட்ரியா ஆதங்கம்


நடிகை ஆண்ட்ரியா, தான் நடிக்கிற ஒவ்வொரு படத்திலும் அழுத்தமாக முத்திரை பதிக்கக் கூடியவர். அந்த வரிசையில் தற்போது, அதிரடி காவல் அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் "மாளிகை". "சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட்" சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் தில்.சத்யா.


இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர்கள் கமல் போரா மற்றும் ராஜேஷ் குமார் இருவரும் வந்திருக்கும் அனைவரையும் வரவேற்று பேசி தொடங்கி வைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் தில் சத்யா பேசும் போது,

"இந்தப்படத்தை இயக்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் எனக்கு இது முதல் படம். இந்தப்படத்தில் ஆண்ட்ரியா ஆங்கிலப் பட நாயகியைப் போல் நடித்துள்ளார். கதாநாயகனாக நடித்திருக்கும் ஜே.கே, இந்தப்படம் கதாநாயகிக்குதான் முக்கியத்துவம் என்றாலும், நல்லக் கதையம்சம் கொண்ட படம் என்பதற்காக நடித்துக் கொடுத்தார். கே.எஸ்.ரவிக்குமார் சாரைப் பற்றி நான் சொல்லவே வேண்டாம். அவர் உண்மையிலேயே பெரிய மனிதர். சகஜமாக பழகி நடித்துக் கொடுத்தார். படத்தில் வேலை செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு நல்ல ஆக்‌ஷன் திரில்லர் படம், ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்" என்றார்.


நடிகை ஆண்ட்ரியா பேசும்போது, 

"இந்தப்படம் முதலில் கன்னடத்தில் பண்ண வேண்டிய படமாகத்தான் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஆண்ட்ரியாவிற்கு தமிழில் மார்க்கெட் இருக்கு. அதனால், தமிழில் எடுக்க வேண்டும் என்று சொன்னார். ஒரு இந்தி தயாரிப்பாளர், கன்னட இயக்குனர் இருவருக்கும் எனக்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறது என்று தோன்றி இருப்பது மகிழ்ச்சி. ஆனால் இங்கு இருப்பவர்களுக்கு ஏதும் தோன்றவில்லை. நான் நிறைய பெரிய இயக்குனர்களிடம் வேலை செய்திருக்கிறேன். இந்தப் படத்தின் அனுபவம் முக்கியமானது. நாயகிக்கு முக்கியத்துவம் அதிகமுள்ள படத்தில் நடித்ததிற்காக ஹீரோ ஜே.கே-வுக்கு எனது நன்றிகள். ஆலி சார் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் சார் இருவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம் எனக்கு இரண்டு வேடம் என்பதால் தான். இந்த மாதிரியான கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்" என்றார்.


இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, 

‘இந்தப்படத்தின் இயக்குனர் தில் சத்யாவிற்கு நிறைய விசயங்கள் தெரிந்திருக்கிறது. ஆனாலும் என்னிடம் யோசனைகள் கேட்பார். நான் இப்போது ஏழு தமிழ் படங்களில் நடித்து வருகிறேன். இந்தப் படத்தில் நான் கமிஷனர் வேடத்தில் நடிக்கிறேன். இந்த இயக்குனர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்தது. அதனால் தான் உடனேயே நடிக்க சம்மதித்தேன். இப்படத்தின் ஹீரோ ஜே.கே அழகாக இருக்கிறார். ஆண்ட்ரியா திறமையானவர். நடனம், பாட்டு, நடிப்பு என பன்முக திறமை அவரிடம் உண்டு. அவர் நடிப்பில் தரமணி படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைப்போல் இந்தப்படத்திலும் நன்றாக நடித்திருக்கிறார்’ என்றார்.

இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில்,

"நான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இது மிகப்பெரிய நிகழ்ச்சியாக இருக்கிறது. படத்தின் டைட்டில், டீசர், இந்த விழா என எல்லாமே பாசிட்டிவாக இருக்கிறது. இந்தக்கதை மிக வித்தியாசமாக அமைந்திருப்பதால் நிச்சயம் இந்தப்படம் ஜெயிக்கும். தயாரிப்பாளர் கமல்போரா சார் இன்னும் நிறைய படங்களை தமிழில் தயாரிக்க வேண்டும். சகலகலாவல்லி ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்தப்படத்திலும் அவர் கலக்கி இருப்பார் என்று நம்புகிறேன். இந்தப்படத்தின் இயக்குநருக்கு மிகப்பெரிய வாழ்த்துகள்" என்றார்.

Saturday, 3 November 2018

Vijay antony & Arun vijay to act in Director Naveen's next

Vijay antony & Arun vijay to act in Director Naveen's next titled "AGNI SIRAGUGAL  " Produced by T Siva for Amma creations.

Amma creations T  Siva  who had created a special space for himself with his  ever lasting production values is all set to launch his next with Vijay Antony & Arun Vijay as the Hero and Naveen of "Moodar Koodam" games the director. Arun Vijay plays a very important role in this film . Shalini Pandey who made an extra ordinary debut in "Arjun Reddy" plays the heroine. Prakash Raj, Jagapathi Babu, sendraayan and others play formidable roles in this film titled "AGNI SIRAGUGAL ".It is to be noted that the title "Agni siragugal" is well registered in the minds of the Tamil audience as the book authored by the late Dr Abdul Kalam is titled the same.




While K A Batcha dons the mantle of cinematography , Natarajan Sankararan compose the music,and Naveen scripts the story, screen play, dialogue, of the film and direct this action thriller.

"The title"Agni Siragugal"  give us instant energy. The energy that is derived from the man who set the wings on fire. This script was not written having Vijay Antony exclusively into my mind. But once the characterization of the protagonist was formed we believed he was the apt choice. It is indeed a pride  for any director to direct a film for Amma creations. The producer T Siva was  more than willing to offer me whatever i ask for. The stellar star cast and the rich locations in which we are in renting to shoot are the perfect testimonials to this.

Arun Vijay had always impressed me and Iam sure this film will determine his position much stronger. Iam glad to declare that the core team of mine is retained for this film too. This bilingual film which will be shot in Tamil and Telugu will be shot in certain parts of Europe, apart from kolkata and Goa in our country. Intriguing and intense stunt sequences will be shot in Abroad. We are excited enough to start the shooting very soon "conveyed Naveen with his trademark confidence .

Monday, 1 October 2018

Arya and Vijay Antony at Master Athletic Meet

 "Master Athletic Meet"


  • சென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன் நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 

    நடிகர் ஆர்யா, இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர் விஜய் ஆண்டனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஊக்கப்படுத்தியதோடு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தனர்.

    100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 55+ வயது பிரிவில் முதல் இடத்தை பிடித்திருக்கிறேன். நான் தேசிய அளவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற முயற்சிப்பேன் என்றார் அசோஷியேஷன் தலைவரும், ஓட்டப்பந்தய வீரருமான செண்பகமூர்த்தி.

    ஒவ்வொரு வருடமும் நான் தவறாமல் இந்த அத்லெடிக் போட்டிகளை காண வருவேன். 35 வயது முதல் 100 வயது வரையில், பல்வேறு பிரிவுகளில் ஓட்டப்பந்தயம், தடை தாண்டுதல் போட்டிகள் நடைபெறுகின்றன. இவர்களுடன் நான் போட்டி போட்டு ஓடினால் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது. அந்த அளவுக்கு உடல் வலிமையோடும், அர்ப்பணிப்போடும் கலந்து கொண்டு ஒடுகிறார்கள். அவர்கள் ஓடும் வேகத்தை பார்த்தால் நமக்கு நிறைய பயிற்சி தேவை என்பது புரிகிறது. இவர்களை பார்த்தாலே நமக்குள் ஒரு உத்வேகம் பிறக்கிறது. அதனாலேயே தவறாமல் ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொள்கிறேன். இவர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளிலும் கூட கலந்து கொள்கிறார்கள். நாம் தான் உடல்நிலையை பேணிக்காப்பதில் அக்கறை செலுத்துவதில்லை. அதற்கு ஏதாவது ஒரு காரணம் தேடுகிறோம். இவர்களை போல நாமும் உடலை பேணிக்காப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் என்றார் நடிகர் ஆர்யா.

    நான் தொடர்ந்து 2வது ஆண்டாக இந்த போட்டிகளை காண வந்திருக்கிறேன். 95 வயது பெரியவர் ஒருவர் ஓடி வெற்றி பெற்றார். அதையெல்லாம் பார்க்கும் உண்மையிலேயே ஆச்சரியமாகவும், நமக்கு ஒரு உந்துதலாகவும் இருக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டும் மெடல் கொடுக்காமல், கலந்து கொள்ளும் அனைவருக்குமே விருதுகள் வழங்க வேண்டும். ஏனென்றால் இவ்வளவு வெயிலிலும் முழு முயற்சியுடன் வெற்றியை மனதில் வைத்து ஓடுகிறார்கள். அவர்கள் நமக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே ஆரோக்கியத்தை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியத்தை கட்டாயமாக்க வேண்டும் என்றார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.

    இங்கு வருவதற்கு முன்பு எந்தவித சிந்தனையும் இல்லாமல் வந்தேன். ஒரு தாத்தா மிக வேகமாக ஓடுவதை பார்த்து அசந்து விட்டேன். எனக்கே வயதாகி விட்டது என நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன், இங்கு வந்த பிறகு தான் வயது ஒரு விஷயமே அல்ல என்பதை உணர்ந்தேன். உடல் ஆரோக்கியம் தான் முக்கியம். எனக்கு செண்பகமூர்த்தி சாரை 6 வருடமாக தெரியும். காலையில் 4 மணிக்கு எழுவார், சரியான நேரத்துக்கு தூங்குவார். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நேரம் ஒதுக்கி, உடல்பயிற்சி செய்வார். நாம் அனைவரும் உடல்பயிற்சி செய்வது அவசியம் என்றார் நடிகர் விஜய் ஆண்டனி.









  • இந்த போட்டிகளை அமைப்பின் தலைவர் செண்பகமூர்த்தி மற்றும் செயலாளர் ருக்மிணிதேவி ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர். 35 வயது முதல் 100 வயது வரையிலான பல்வேறு பிரிவுகளில் நடந்த ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் போட்டிகளில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். 



  • வெற்றி பெற்றவர்கள் அடுத்து தஞ்சாவூரில் நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அடுத்தடுத்து இந்தியா, ஆசியா மற்றும் உலக அளவில் போட்டிகள் நடக்க இருக்கின்றன.