Featured post

ParAsakthi Movie Review

ParAsakthi Tamil Movie Review  *ParAsakthi Movie Rating: 4.5//5* ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம parasakthi படத்தோட review அ தான் பாக்க போறோம். இ...

Saturday, 21 August 2021

சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள

                             சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள 'வினோ கிரியேஷன்ஸ் ஃபேஷன் ஸ்டுடியோ'வை, ஜான் அமலன் மற்றும் ஜெயா மகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


தமிழ்நாட்டில் மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏராளமான இளம் ஆண்களும், பெண்களும் தங்களது கனவுகளைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் வேளையில், மாடலிங் துறையில் இளைஞர்களை சிறந்த முறையில் வழிநடத்தி, சாதனையாளர்களாக மாற்றும் முயற்சியில், சென்னை தேனாம்பேட்டையில் புதிதாக பேஷன் ஸ்டுடியோ ஒன்று திறக்கப்பட்டுள்ளது. பேஷன் துறையில் வளர்ந்து வரும் பேஷன் பயிற்றுநரும், இளம் தொழில்முனைவோருமான வினோத் தொடங்கியுள்ள இந்த 'வினோ   கிரியேஷன்ஸ் ஃபேஷன் ஸ்டுடியோ'வை, இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜான் அமலன் மற்றும் பிரபல மாடலும், மருத்துவருமான ஜெயா மகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  
 

















































































 

தொடக்க விழாவில் பிரபல நட்சத்திர பேஷன் பயிற்றுநர் கருண் ராமன் கலந்துகொண்டு வாழ்த்தினார். மேலும், ஏராளமான மாடல் அழகிகள் கலந்து கொண்டு, மேடையில் ஒய்யாரமாக நடந்து அசத்தினர். வினோ  கிரியேஷன்ஸ் ஃபேஷன் ஸ்டுடியோ, திறமையான இளம் மாடல்களை உருவாக்குதல், பேஷன் ஷோக்கள் மற்றும் அழகிப் போட்டிகளை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள உள்ளதாக வினோத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment