Featured post

Produced by M Cinema's Bathri and directed by Sajisaleem, 'Produced by M Cinema's

 Produced by M Cinema's Bathri and directed by Sajisaleem, 'Produced by M Cinema's Bathri and directed by Sajisaleem, 'Laand...

Wednesday, 2 November 2022

ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளரை வியக்க வைத்த சமந்தாவின் அர்ப்பணிப்பு

 *ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளரை வியக்க வைத்த சமந்தாவின் அர்ப்பணிப்பு!*


நடிகை சமந்தாவின் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘யசோதா’ ஹரி- ஹரிஷ் இயக்கத்தில் இந்த வருடம் நவம்பர் மாதம் 11ம் தேதி வெளியாக இருக்கிறது. ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். படம் மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது என்பதை சமீபத்தில் வெளியான அதன் ட்ரைய்லர் காட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளது. 



படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான ட்ரைய்லர், படத்தின் ஒரு வரி பற்றி கூறியுள்ளது. ட்ரைய்லரில் பார்த்த ஆக்‌ஷன், எமோஷன் மற்றும் த்ரில்லான பரபரப்புக் காட்சிகளை நாம் விரைவில் திரையரங்குகளில் காண இருக்கிறோம்.  


படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்குக் கிடைத்து வரும் நல்ல வரவேற்பால் மகிழ்ச்சியடைந்துள்ள சண்டைப் பயிற்சியாளர் யானிக் பென், இந்த அதிதீவிரமான சண்டைக் காட்சிகளில் சமந்தா நடித்துள்ளது குறித்து பகிர்ந்துள்ளார். சமந்தாவின் தீவிரமான அர்ப்பணிப்பும் ஆர்வமும் மட்டுமே இந்த சண்டைக் காட்சிகளை அடுத்த நிலைக்கு எடுத்து சென்று பார்வையாளர்களுக்கு பரபரப்பூட்டுவதாக மாற்றியுள்ளது எனவும் கூறியுள்ளார். இதற்கு முன்பு யானிக் பென் சமந்தாவுடன் ‘தி ஃபேமிலி மேன்2’ வெப் சீரிஸில் இணைந்து பணியாற்றினார். தற்போது சிறந்த ஆக்‌ஷன் காட்சிகளுக்காக மீண்டும் ‘யசோதா’ படத்தில் ஒன்றிணைந்துள்ளனர். 


ஐகிடோ, கிக் பாக்ஸிங், ஜீத் குனே டோ, ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் மணல் பயிற்சியில் நிபுணத்துவம் பெற்றவரான யானிக் பென் புகழ்பெற்ற ஹாலிவுட் படங்கள், நாற்பதுக்கும் மேற்பட்ட தெலுங்கு மற்றும் இந்தி படங்களுக்கு சண்டைப் பயிற்சி கொடுத்துள்ளார். ‘ட்ரான்ஸ்போர்ட்டர் 3’, கிறிஸ்டோபர் நோலனின் ‘இன்செப்ஷன்’, ‘டன்கிர்க்’, ஷாருக்கானின் ‘ரயீஸ்’, சல்மான் கானின் ‘டைகர் சிந்தா ஹை’, பவன் கல்யாணின் ‘அத்தாரிண்டிகி தரேதி’, மகேஷ் பாபுவின் ’1- நேனோக்கடைன்’, அல்ல் அர்ஜூனின் ‘பத்ரிநாத்’, சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’ மற்றும் பல படங்களில் பணிபுரிந்துள்ளார்.

No comments:

Post a Comment